பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்143

பல ஏட்டுச் சுவடிகளும் நூல்களாக அச்சிடப்பட்டுள்ளன.
இங்குள்ள சமஸ்கிருதம், மராத்தி, தமிழ், தெலுங்கு ஆகிய
மொழிகளிலுள்ள சுவடிகள் அறிவுக் கருவூலங்களாக உள்ளன.
நூல்நிலையத்தை அடுத்த அரண்மனைப் பகுதியில் செப்டம்பர்
15, 1981இல் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்ப் பல்பலைக் கழகம்
அமைந்துள்ளது.

கலைக்கூடம் அருகில் எழுநிலைக் கூடம் ஒன்றும்,
‘சங்கீத மாளிகை’ என்ற கட்டடமும் உள்ளன.

தஞ்சை அரண்மனையின் எஞ்சியப் பகுதிகளைக்
காப்பது நமது கடமையாகும்.

இராணியின் கோபுரம்

தஞ்சை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சிறிது
தொலைவில், நகராட்சிக் கட்டடத்திற்கு அருகில் இராணியின்
மணிக்கூண்டு கோபுரம்
உள்ளது. இது 1885 இல்
கட்டப்பட்டது. மிக உயரமான இக்கோபுரம் தஞ்சை நகரின்
ஒரு அழகிய சின்னமாகும். இக்கோபுரத்தின் கீழ்ப்பகுதியில்
“முதல் உலகப் போருக்கு (1914-18) தஞ்சை நகரிலிருந்து 61
வீரர்கள் சென்றதாகவும், அவர்களுள் நால்வர் வீர மரணம்
அடைந்தனர்” என்ற குறிப்பும் (ஆங்கிலத்தில்)
பொறிக்கப்பட்டுள்ளது.

திருவையாறு

தஞ்சாவூர் நகரிலிருந்து 13 கி.மீ. தொலைவில்
திருவையாறு உள்ளது. இது புகழ்மிக்க ஒரு சிவ வழிபாட்டுத்
தலம் ஆகும். இங்கு பஞ்சநதீஸ்வர சுவாமி கோவில்
எனப்படும் ஐயாறப்பர் கோவில் உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள
பழம் பெரும் சிவாலயங்களில் இது ஒன்றாகும். சைவ சமயக்
குரவர்களின் பாடல் பெற்ற தலமாகும். காவிரியின் ஐந்து கிளை
நதிகள் செல்லும் பகுதியில் இவ்வூர் அமைந்திருப்பதால்
திருவையாறு என்ற பொயர் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இக்கோவிலின் இறைவன் பஞ்சநதீஸ்வரர் அல்லது
ஐயாறப்பர் எனப்படுகிறார். இறைவி அறம் வளர்த்த
நாயகி எனப்படுகிறார்.