அரண்மனையின் நல்ல நிலையிலுள்ள பகுதியில்
சரஸ்வதி மகால் என்ற கட்டடமும், தஞ்சை சரபோஜி
மன்னர் நூல்நிலையமும் உள்ளன. ‘சரஸ்வதி மகால்’
கட்டடத்தில் கலைக்கூடம் ஒன்று 1951ஆம் ஆண்டு
அமைக்கப்பட்டது. இங்குள்ள 100-க்கு மேற்பட்ட
கருங்கற்சிலைகள் அரிய சேகிரிப்புகளாகும். கும்பகோணம்,
தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலிலிருந்து கொண்டுவரப்பட்ட
பல அழகிய கற்சிலைகள் இங்கு உள்ளன. அவற்றுள்
குறிப்பிடத்தக்க ஒன்று இரண்டாம் இராஜேந்திர சோழன்
சாளுக்கியரை வென்று சாளுக்கியர் தலைநகரான கல்யாணியிலிருந்து
தனது வெற்றிப் பரிசாகக் கொண்டுவந்த துவார
பாலகர்
சிற்பம் ஆகும்.
நாயக்கர் ‘தர்பார்’ மன்றம் கி.பி. 1600இல் கட்டப்பட்டதாகும்.
அழகிய தூண்கள், வளைவுகள், குவிமாடம், சித்திர
வேலைப்பாடுகள்
ஆகியவற்றைக் கொண்ட இக்கட்டடப் பகுதியில் 160-க்கு
மேற்பட்ட
வெண்கலச்சிலைகள் காட்சிப் பொருள்களாக உள்ளன. இவை
தமிழ
மக்களின் வார்ப்புக் கலைத்திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக
உள்ளன. இம்மன்றத்தில் இரண்டாம் சரபோஜி மன்னரின்
அழகிய பளிங்குச் சிலை ஒரு மேடைமீது நிறுவப்பட்டுள்ளது.
‘ஆயுதக்கோபுரம்’ என்ற மாடிக் கட்டடத்திலும் சில காட்சிப்
பொருள்கள் உள்ளன.
கலைக்கூடத்தை அடுத்து அரண்மனையின் ஒரு பகுதிக்
கட்டடத்தில் நூல்நிலையம் உள்ளது. தஞ்சை மன்னர்
சரபோஜியின் பெயரைக் கொண்ட இந்த நூலகம் அமைவதற்கு
இம்மன்னர் முக்கிய பங்கெடுத்தார். மருத்துவம், கலை,
இலக்கியம் சம்பந்தமான நூல்களையும், பழமையான ஓலைச்
சுவடிகளையும் சேகரிப்பதையும் படிப்பதையும் தம் இனிய
பொழுதுபோக்காகக் கொண்டிருந்தார். இவரது முயற்சிக்கு
சுவாட்ஸ் பாதிரியார் துணையாக இருந்தார், மன்னர்
சரபோஜி
சேகரித்து வைத்த நூல்கள் இன்றைய சரஸ்வதி
மகால்
நூலகத்தைப் பெரிதும் விரிவுபடுத்தின. இந்நூலகத்தில்
சுமார் 16,000 ஓலைச் சுவடிகளும், 24,000 காகிதச்
சுவடிகளும் உள்ளன.
|