பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்175

திருச்சி நகர் அருகிலுள்ள கோவில்கள்
இதர பண்பாட்டுச் சின்னங்கள்

திருச்சி நகரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் சமயபுரம்
உள்ளது. இங்கு புகழ்மிக்க மாரியம்மன் கோவில் உள்ளது.
இது இந்துக்களின் புனிதப் பயணத் தலமாக உள்ளது.

இன்றைய சமயபுரப் பகுதியில் கி.பி. 13ஆம்
நூற்றாண்டில் கண்ணனூரைத் தலைநகராகக்கொண்டு வீர
சோமேஸ்வரன்
என்ற ஒய்சள மன்னர் ஆட்சி புரிந்தார்.
சமயபுரத்திலிருந்து சிறிது தொலைவில் ஒய்சள மன்னர்
காலக்கோவில் உள்ளது. இது போசளேசுவரர் கோவில்
எனப்படுகிறது.

திருச்சி நகரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உய்யக்
கொண்டான் திருமலை
என்ற சிற்றூர் உள்ளது. இங்கு
உஜ்ஜி வனத்தார்
கோவில் உள்ளது. தஞ்சைச்
சோழர்களின் திருப்பணிகளை இக்கோவில் கொண்டுள்ளது.

திருச்சி நகரிலிருந்து 9 கி.மீ. தொலைவில் திருவெறும்பூர்
உள்ளது. இங்குள்ள மலைமீது எறும்பீஸ்வரர் கோவில்
உள்ளது. இக்கோவில் ஆதித்த சோழன் காலத்தில்
‘கற்றளி’யாகக் கட்டப்பட்டது. திருவெறும்பூரில் மத்திய அரசின்
தொழில் நிறுவனம் (BHEL) உள்ளது. திருச்சி நகருக்கு
அருகிலுள்ள வயலூரில் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது.

திருச்சி நகரிலிருந்து 14 கி.மீ. தொலைவில் கல்லணை
உள்ளது. காவிரியும் கொள்ளிடமும் கூடுமிடத்தில் இவ்வணை
உள்ளது. இவ்வணையின் ஆதிப்பகுதி சங்க காலத்தில்
தலைசிறந்து விளங்கிய சோழமன்னனான கரிகாலனால்
கட்டப்பட்டதாகும். கரிகாலன் கட்டிய கல்லணை பல
மாற்றங்களுக்கு உட்பட்டுத் தற்பொழுது பேரணை என்று
அழைக்கப்படுகிறது. கரிகாலனை நினைவுகூறும் வகையில்
அவர் யானைமீது அமர்ந்திருக்கும் சிற்பம் இவ்வணைப்பகுதியில்
உள்ளது.

திருச்சி நகரிலிருந்து 50 கி.மீ. தொலைவில் சீனிவாசநல்லூர்
உள்ளது. இங்கு குரங்குநாதர் கோவில் உள்ளது. இது