பக்கம் எண் :

234தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

யாவரையும் வியப்பில் ஆழ்த்தும். இம்மண்டபத்தின்
முன்பகுதியிலுள்ள கற்றூண்களில் காணப்படும் சிற்பங்கள்
ஒவ்வொன்றும் ஒரு கலைக்கருவூலமாகும். ஆயிரம்கால்
மண்டபத்தில் கோவில் நிர்வாகத்தினர், ‘கோயிற்கலைப்பற்றிய’
அருங்காட்சியகம் ஒன்றை அமைத்துள்ளனர்(1966).

9. கோபுரங்கள் மீனாட்சி கோவிலின் ஒரு தனிக்கவர்ச்சியாகும்.
இங்கு 12 கோபுரங்கள் உள்ளன. அவற்றுள் நான்கு
வெளிக்கோபுரங்கள் மிகவும் உயரமானவை. தெற்குக் கோபுரமே
எல்லாக் கோபுரங்களிலும் உயரமானதாகும். இக்கோபுரத்தின்
உயரம் 52 மீட்டர். இதை கி.பி. 1559இல் திருச்சி நகரைச்
சேர்ந்த செவ்வந்திச் செட்டி அமைத்தார். மற்ற மூன்று பெரிய
கோபுரங்களில் மேற்குக் கோபுரம் பராக்கிரம பாண்டியனால்
கி.பி.1323ஆம் ஆண்டிலும், கிழக்குக் கோபுரம் மாறவர்மன்
சுந்தர பாண்டியனாலும் (1216 - 1238) அமைக்கப்பட்டது.
வடக்குக் கோபுரம் நாயக்க மன்னர் முதலாம் கிருஷ்ணப்பரால்
(1564-1572) கட்டப்பட்டு 1878இல் வயிநாகரம் குடும்பத்தினரால்
பூர்த்தி செய்யப்பட்டது. கோபுரங்களின் அடித்தானம், பாதம்
ஆகியவற்றின் கல் வேலைப்பாடுகளும், சிகரத்திலுள்ள புராணச்
சம்பவங்களைக் கூறும் சுதைச் சிற்பங்களும் வேலைப்பாடுமிக்கவை.
முற்றுப்பெறா நிலையிலுள்ள இராயகோபுரத்தின் அடிப்பகுதி
சிற்ப வேலைப்பாடுமிக்கது. இது திருமலை மன்னர் காலப்
பணியாகும்.

10. வடக்கு ஆடிவீதியில் 5 இசைத் தூண்கள், ஆயிரம்
கால் மண்டபத்தில் இரு இசைத் தூண்கள் ஆக மொத்தம் 7
இசைத் தூண்கள் மீனாட்சி கோவிலில் உள்ளன. கல்லில்
இசைபாடும் இத்தூண்கள் தமிழகச் சிற்பக் கலைஞர்களின்
உன்னதப் படைப்புகளாகும்.

11. பொற்றாமரைக் குளத்தின் வடக்கு, கிழக்குச் சுவர்களிலும்,
ஊஞ்சல் மண்டபத்திலும் அழகிய ஒவியங்கள் உள்ளன. இவை
நாயக்க மன்னர்கள் காலத்தவையாகும்.