எதிரிலுள்ள முத்துப்பட்டிமலையின் தென்பகுதியிலும், 4. மதுரை
காமராசர் பல்கலைக் கழகத்திற்கு மேற்கில் 3 கீ.மீ.
தொலைவிலுள்ள
கொங்கர்-புளியங்குள மலையிலும், 5. நரசிங்கம் கிராமத்தின்
அருகில் ஆனைமலையிலும், 6. சுந்தரராஜபட்டி என்ற கிராமம்
அருகில், அழகர் மலையிலும், சமணச் சிற்பங்களைக்
காணலாம்.
மதுரை நகரிலிருந்து 109 கி.மீ. தொலைவிலுள்ள
உத்தமபாளையத்தில் கருப்பணசுவாமி கோவில்
பாறையில்
சமணத் தீர்த்தங்கரர்களின் பல திருவுருவங்கள்
உள்ளன.
மேலூர்-திருப்பத்தூர் சாலையில் கீழ்வளவு
மலையிலும் சமணச்
சிற்பங்கள் உள்ளன.
மதுரை மாவட்டத்தில் மதுரை நகரிலிருந்து 125 கி.மீ.
தொலைவில் கூடலூர் உள்ளது. கூடலூருக்குத் தெற்கில்,
கேரள அரசின் எல்லையில் மங்கலாதேவி
கோவில் உள்ளது.
இது ‘கண்ணகி கோவில்’ எனப்படுகிறது. கண்ணகி
விண்ணுலகு
அடைந்தபின், சேரன் செங்குட்டுவனால் இக்கோவில்
கண்ணகிக்கு எழுப்பப்பட்டது எனப்படுகிறது. இக்கோவில் மீது
தமிழக அரசு, கேரள அரசு ஆகிய இரு அரசுகளும் உரிமை
கொள்கின்றன.
மதுரை காமராசர் பல்கலைக் கழகம்
தமிழ்நாட்டின் முதல்
பல்கலைக் கழகம், சென்னைப்
பல்கலைக் கழகம் ஆகும். இது கி.பி. 1857இல்
தோற்றுவிக்கப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
கி.பி. 1929 இல் தோற்றுவிக்கப் பட்டது. கி.பி. 1966 ஆம் வருடம்
மதுரைப் பல்கலைக் கழகம் ஏற்படுத்தப்பட்டது. மதுரை நகரில்
அழகர் கோவில் சாலையில், இதன் கட்டடம் முதலில்
அமைந்திருந்தது. பின் மதுரையிலிருந்து 12 கி.மீ.
தொலைவில
(மதுரை-தேனி) சாலையில், நாகமலையின் அடிவாரத்தில்
கட்டப்பட்ட புதிய கட்டடங்களில் 1973ஆம் ஆண்டு முதல்
இது செயல்பட ஆரம்பித்தது. தமிழ் மொழிக்குத் தொண்டாற்றிய
தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் (1899-1980) இப்பல்கலைக்
கழகத்தின்
முதல் துணைவேந்தராகவும், டாக்டர் மு.வரதராசனார் (1912-
|