மதுரையை அடுத்துள்ள குன்றுகளில் காணப்படும்
சமணச்
சிற்பங்கள்
இந்தியாவில்
புகழ்பெற்று விளங்கிய சமண மையங்களில்
மதுரைப்பகுதியும் ஒன்றாகும். களப்பிரர்கள்
ஆட்சிக்காலத்தில்
இப்பகுதியில் சமண சமயம் ஏற்றம் பெற்றது. வச்சிரநந்தி என்ற
சமணப் பெரியார் மதுரையில் கி.பி. 470இல் திராவிடச்
சங்கம்
ஒன்றை நிறுவினார். சமணக் கொள்கைகளைப் பரப்புவது
இச்சங்கத்தின் நோக்கமாக இருந்தது. கி.பி. 7ஆம்
நூற்றாண்டில் திருஞானசம்பந்தரால் சமணர்கள்
வெல்லப்பட்டனர். சமணர்களின் தோல்வியையடுத்து மதுரை
அருகிலிருந்த 8 குன்றுகளில் வாழ்ந்த சுமார் 8000
சமணர்கள்
கழுவிலேற்றப்பட்டு மாண்டதாகச் சேக்கிழார் தமது
‘பெரியபுராணத்தில்’ குறிப்பிட்டுள்ளார். கி.பி. 9ஆம்
நூற்றாண்டில் வாழ்ந்த அச்சணந்தி என்ற சமணப் பெரியார்
காலத்தில் மதுரையை அடுத்த சமணர்மலை (மதுரையிலிருந்து
8 கி.மீ.) ஒரு சிறந்த சமணர் பள்ளியாகத் திகழ்ந்தது என
அறியப்படுகிறது. இப் பெரியார் செய்வித்த சமணச் சிற்பங்கள்
பல மதுரையை அடுத்த குன்றுகளில் உள்ளன. மதுரைக்கு
அருகிலுள்ள பல குன்றுகளில் சமணப் பெரியார்கள்
வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்குச் சான்றாக
அங்குச்
சமணத்தீர்த்தங்கரர்களின் சிற்பங்களும், கற்படுகைகளும்,
வட்டெழுத்துக் கல்வெட்டுகளும் உள்ளன. சமணச் சிற்பங்கள்,
இயற்கையாக அமைந்திருக்கும் மலைப் பாறையைச் செதுக்கி
அமைக்கப்பட்டுள்ளன. இச்சிற்பங்கள் அளவில் சிறியவையாயினும்
அழகில் சிறந்துள்ளன. ஆதிபகவன், நேமிநாதர்,
பார்சுவநாதர்,
மகாவீரர் போன்ற சமணத் தீர்த்தங்கரர்களின்
உருவங்களும்
வேறுசில சமணச் சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
1. திருப்பரங்குன்றத்தின்
உச்சியில் காசி விஸ்வநாதர்
கோவிலுக்கு அருகிலும், 2. நாகமலை புதுக்கோட்டையையடுத்துள்ள
சமணர்மலையின், வடக்குப் பகுதியில் பேச்சிப் பள்ளத்திலும்,
மலையின் தென்மேற்கில் ‘செட்டிப் பொடவு’ பகுதியிலும்,
3. மதுரை-காமராசர் பல்கலைக் கழகத்தின்
|