சந்தாசாகிப் என்பவர் கர்நாடக நவாபாக விரும்பி
பிரெஞ்சுக்காரர்களுடன் சேர்ந்துகொண்டு நவாப் அன்வாரு
தீனுடன் போரிட்டார். நவாப் அன்வாருதீன் போரில் இறந்தார்
(1749). ஆனால், அன்வாருதீனின் மகன் முகமதலி ஆங்கிலேயரின்
படை உதவியைப் பெற்றார். ஆங்கிலப்படை சந்தாசாகிப்பையும்
பிரெஞ்சுப் படைகளையும் தோற்கடித்து, முகமதலியை ஆர்க்காட்டின்
நவாப் ஆக்கின (1753). ஆங்கிலேயரின் அந்த வெற்றிக்கு
காரணமாயிருந்தவர் கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றிய
‘ஆர்க்காட்டு வீரர்’ இராபர்ட் கிளைவ் ஆவார்.
மூன்றாவது கர்நாடகப் போரின்பொழுது பிரெஞ்சுத் தளபதி
லாலி சென்னையை முற்றுகையிட்டார் (1759). ஆனால்,
ஆங்கிலேயரது போர் நடவடிக்கைகள் லாலியின் முயற்சியைத்
தோல்வியுறச் செய்தன.
ஆங்கிலேயரின் உதவியால் ஆர்க்காட்டின் நவாபான முகமதலி,
கி.பி. 1795வரை கர்நாடக நவாபாக இருந்தார். இவர் சென்னைக்
கடற்கரையில் (சேப்பாக்கத்தில்) ஒரு மாளிகையைக்
கட்டிக்கொண்டார். ஆங்கிலேயரிடம் இவர் பட்ட கடன் இவர்
ஆட்சியை வீழ்ச்சியுறச் செய்தது. கி.பி. 1801இல் கர்நாடகம்
முழுவதும் ஆங்கிலேயரின் நேரடி ஆட்சியில் வந்தது.
கி.பி. 1801முதல் 1947வரை தமிழகம் முழுவதையும்
சென்னையைத் தலைநகராகக்கொண்டு ஆங்கிலேயக்
கிழக்கிந்தியக் கம்பெனியார் ஆட்சி புரிந்தனர்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்
சென்னை நகரின் முன்னேற்றம்
வேங்கடப்பரிடமிருந்து கி.பி. 1639இல் ஆங்கிலக்
கிழக்கிந்தியக் கம்பெனியார் இன்றைய புனித ஜார்ஜ் கோட்டையைச்
சூழ்ந்த ஒரு பகுதியை மட்டும் பெற்றனர். கி.பி. 1640இல் புனித
ஜார்ஜ் கோட்டையின் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்டு அதனுள்
அவர்கள் அமர்ந்தனர். பின்
|