பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்29

படிப்படியாகச் சென்னை நகரின் பல பகுதிகள் இவர்கள்
ஆட்சியின்கீழ் வந்தன. தண்டையார்பேட்டை, புரசைவாக்கம்,
எழும்பூர் ஆகிய பகுதிகளைக் கி.பி. 1693இல் ஆங்கிலேயர்
பெற்றனர். வியாசர்பாடி, நுங்கம்பாக்கம், திருவொற்றியூர்,
எண்ணூர்
ஆகிய பகுதிகளைக் கி.பி. 1708இல் பெற்றனர். வேப்பேரி, பெரம்
பூர் ஆகிய பகுதிகளைக் கி.பி. 1742இல் பெற்றனர். சாந்தோம் பகுதியைக் கி.
பி. 1749இல் பெற்றனர்.

ஆங்கிலேயர் வருகையால் புனித ஜார்ஜ் கோட்டையச் சுற்றி
ஒரு புதிய நகரம் உண்டாயிற்று. எலிகு ஏல் (Elihu Yale) என்பவர்
புனித ஜார்ஜ் கோட்டையில் ஆங்கில ஆளுநராகப் பணியாற்றிய
பொழுது (1687-1692) சென்னையில் மாநகராட்சிக் கழகம்
அமைக்கப்பட்டது (1688). சென்னையில் மாநகராட்சிக் கழகம்
அமைப்பதற்கான திட்டத்தை முதலில் கூறியவர், சர் ஜோஸியா
சைல்ட்
ஆவார். கி.பி. 1688, செப்டம்பர் 29இல் சென்னை
மாநகராட்சிக் கழகம் உதயமாயிற்று. சென்னை மாநகராட்சிக்
கழகத்தின் முதல் மேயர் நெதானியல் ஹிக்கின்சன் ஆவார்.
சென்னை தமிழ்நாட்டின் முதல் மாநகராட்சிக் கழகம் ஆகும்.
இதுவே இந்தியாவிலேயே முதன்முதல் அமைக்கப்பட்ட
மாநகராட்சிக் கழகமும் ஆகும். இம்மாநகராட்சியின் வளர்ச்சிக்கு
உதவிய பெருமக்களுள் மூர், பியர்ஸ், லாயிட் போன்ற
ஆங்கிலேயர்களும், திவான் பகதூர் சர். பி. தியாகராய செட்டியார்,
திவான் பகதூர் வி. திருமலைப் பிள்ளை, சர் முகமது உஸ்மான்
சாகிபு,
திரு. எஸ். சத்தியமூர்த்தி, செட்டி நாட்டு அரசர்
முத்தையா செட்டியார் போன்றோர் சிறப்பாகக்
குறிப்பிடப்படுகின்றனர். கி.பி. 1801இல் வெல்லெஸ்லி பிரபு
சென்னை மாநிலத்தை உருவாக்கியபொழுது இதன் தலைநகரமாகச்
சென்னை ஆயிற்று.

கி.பி. 19, 20ஆம் நூற்றாண்டுகளில் சென்னை நகர் பெரிதும்
வளர்ச்சியடைந்தது. கி.பி. 1853 முதல் சென்னை நகர் இருப்புப்
பாதைகள் மூலம் இணைக்கப்படலாயிற்று. கி.பி. 1857இல் சென்னைப்
பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. கி.பி. 1862இல் சென்னை