உயர்நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது. பாதுகாக்கப்பட்ட குடிநீர்த்
திட்டம் கி.பி. 1868-1872இல் நிறை வேற்றப்பட்டது. பின் சாக்கடைத்
திட்டம் நிறை வேற்றப்பட்டது (1882). சென்னைத் துறைமுகம்
உருவாக்கப் பட்டது (1876-81). நகரில் பல கிறித்தவ ஆலயங்கள்
எழுந்தன. பல பெரிய வங்கிகள் தோன்றின. பல பள்ளிகள்
எழுந்தன. மாநிலக் கல்லூரி, கிறித்தவக் கல்லூரி, லொயலாக்
கல்லூரி, ராணிமேரிகல்லூரி, பச்சையப்பன் கல்லூரி ஆகிய
கலைக்கல்லூரிகளும் சட்டக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி,
கால்நடை மருத்துவக் கல்லூரி, விவசாயக் கல்லூரி, பொறியியல்
கல்லூரி ஆகியவையும் தோற்றுவிக்கப்பட்டன. மேனாட்டு
மருத்துவமனைகள் தோன்றின. கன்னிமாரா என்ற ஆளுநர்
(1886-1890) பெயரில் கன்னிமாரா நூலகம் தோற்றுவிக்கப்பட்டது
(1896). கி.பி. 1895 முதல் நகரில் மின்சார இருப்புப்பாதை
போக்குவரவு (Tramway line) ஆரம்பமாயிற்று. தாமஸ் பாரி
என்ற வணிகரால் கி.பி. 1803இல் பெறப்பட்டப்பகுதி நகரின்
முக்கிய (Parry’s corner) பகுதியாயிற்று. கி.பி. 1910 முதல்
நகருக்கு மின்விளக்கு வசதி கொண்டுவரப்பட்டது. கி.பி. 1913இல்
சென்னை மாநகராட்சிக்கு ஒரு அழகிய கட்டடம் எழுப்பப்பட்டது.
இக்கட்டடம் ‘தல சுய ஆட்சியின் தந்தை’ எனப்படும் ஆங்கில இராஜப் பிரதிநிதி ரிப்பன் பிரபுவின் நினைவாக
ரிப்பன் கட்டடம்
என்று அழைக்கப்படுகிறது. சென்னை நகரில் உள்ள பல
சாலைகள்,
பூங்காக்கள், பாலங்கள், இதர பல கட்டடங்கள் ஆகியவை
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் எழுந்தவை ஆகும். கி.பி. 1639இல்
வேங்கடப்பரிடமிருந்து ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின்
அதிகாரிகள் சென்னைக் கடற்கரைப் பட்டினத்தைப் பெற்ற வரலாற்றுச்
சிறப்புமிக்க நிகழ்ச்சி நடைபெறாமலிருந்திருந்தால், சென்னை மாநகர்
இன்றுள்ள அளவிற்கு வளர்ச்சி பெற்றிருக்காது என்று
கூறலாம்.
இந்தியச் சுதந்தரத்திற்குப்பின் சென்னை நகரில் பல
வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றுள்
குறிப்பிடத்தக்க ஒன்று கூவம் நதிச் சீரமைப்புத் திட்டம்
ஆகும். பக்கிங்காம் ஆலை, பெரம்பூர் இரயில் பெட்டிகள்
செய்யும்
|