தொழிற்சாலை, ஆவடி டாங்கு உற்பத்தித் தொழிற்சாலை,
அம்பத்தூரிலுள்ள சைக்கிள் தொழிற்சாலை, இதர சில
தொழிற்சாலைகள், மணலியிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பாலை,
எண்ணூரிலுள்ள அனல் மின்சக்தி உற்பத்தி ஆலை ஆகியவை
சென்னை நகரிலுள்ள குறிப்பிடத்தக்க தொழிற்சாலைகளாகும்.
இன்றைய சென்னை மாநகர் முழுவதும்
சென்னை
மாவட்டமாக இயங்குகிறது. சென்னை மாநகர் 120 வட்டங்களாகப்
(Wards) பிரிக்கப்பட்டு நிர்வாகம் செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டின் தனிப்பெருந் தலைநகராக விளங்கும் சென்னை,
இந்திய நாட்டின் நான்காவது பெரிய நகரம் ஆகும். 1871இல்
3,97,552 என்ற மக்கள் தொகையைக் கொண்டிருந்த சென்னை
மாநகரின் தற்போதைய (1981) மக்கள்தொகை 42,76,635 ஆகும்.
சென்னை நகரின் வரலாற்றில் எழுந்துள்ள பண்பாட்டுச்
சின்னங்கள்பற்றி இனிச் சிறிது காணலாம்.
புனித ஜார்ஜ் கோட்டை
புனித ஜார்ஜ் கோட்டை
பிரான்சிஸ் டே, ஆண்ட்ரு
கோகன் என்ற ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த
இரு அதிகாரிகளின் முயற்சியால் கி.பி. 1640இல் கட்ட
ஆரம்பிக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் தங்கள் வாணிபத்தின்
பாதுகாப்பிற்காக இதைக் கட்டினர். இங்கிலாந்தின் புனித ஜார்ஜ்
நினைவு நாளான ஏப்ரல் 23, 1640இல் கோட்டையின் ஒரு பகுதி
கட்டி முடிக்கப்பட்டு, இது புனித ஜார்ஜ் பெயரால்
வழங்கப்படலாயிற்று. 1640முதல் தற்காலம்வரை இக்கோட்டையின்
உட்பகுதியில் பல கட்டடங்கள் எழுந்துள்ளன. ஆங்கில
ஆளுநர்களின் தலைமையிடமாக விளங்கிய இக்கோட்டைப்
பகுதியில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக அலுவலகங்கள்,
அமைச்சர் அலுவலகங்கள், சட்ட மன்றங்கள் ஆகியவை உள்ளன.
கோட்டைக்கு உள்ளே வர மூன்று வாயில்கள் உள்ளன.
கோட்டையைச் சுற்றி அகழி உள்ளதை இன்றும் காணலாம்.
புனித ஜார்ஜ் கோட்டைக்குள் தமிழ்நாடு அரசின் தலைமைச்
செயலக அலுவலகங்களைத் தவிர மூன்று முக்கிய கட்டடப்
|