பக்கம் எண் :

32தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

பகுதிகள் உள்ளன. அவை 1. புனித மேரி கிறித்தவ ஆலயம்,
2. கிளைவ் மாளிகை, 3. கோட்டை அருங்காட்சியகம்.

கோட்டைக்குள் காணப்படும் மிகத் தொண்மையான
கட்டடம் புனிதமேரி கிறித்தவ ஆலயம் ஆகும். இதுவே
ஆங்கிலத் திருச்சபையினருக்குரிய ஆலயங்களில் இந்தியாவில்
முதன்முதல் எழுப்பப்பட்டதாகும். (இவ்வாலயத்தைப்பற்றிய
இதர சில குறிப்புகள் ‘சென்னை நகரிலுள்ள கிறித்தவ
ஆலயங்கள்’ தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.)

‘கிளைவ் மாளிகை’ புனித மேரி ஆலயத்திற்கு எதிரில்
உள்ளது. இந்தக் கட்டடம் முன்னாளில் ‘சேமியர்’ சுல்தான்
என்பவருக்குச் சொந்தமாக இருந்தது. இதை ஆங்கிலக்
கிழக்கிந்தியக் கம்பெனியார் விலைக்கு வாங்கினர். ‘ஆர்க்காட்டு
வீரர்’ இராபர்ட் கிளைவ் இங்கு கி.பி. 1753இல் வசித்தார்.
அப்போது இக்கட்டடம் ‘அட்மிரல் மாளிகை’ எனக்
குறிப்பிடப்பட்டது. பின் இது புனித ஜார்ஜ் கோட்டை
ஆளுநரின் நகரமாளிகையாக மாறியது. கி.பி. 1800முதல்
இதில் அரசு அலுவலகங்கள் சில செயல்பட்டு வருகின்றன.

‘கோட்டை அருங்காட்சியகம்’ உள்ள கட்டடம்
கி.பி. 1795இல் எழுப்பப்பட்டது. கி.பி. 1948ஆம் ஆண்டு
இதில் அருங்காட்சியகம் (Museum) அமைக்கப்பட்டது.
புனித ஜார்ஜ் கோட்டையில் கிடைத்த பழம்பொருள்கள்,
பல வகைப் பீரங்கிகள், ஆயுதங்களின் வகைகள், ஆங்கிலேயரும்
இதர சில ஐரோப்பியர்களும் வெளியிட்ட நாணயங்கள்,
காரன்வாலிஸ் பிரபுவின் பெரிய பளிங்குச் சிலை, இங்கிலாந்து
நாட்டின் அரசர்கள், அரசிகள், புனித ஜார்ஜ் கோட்டையில்
பணியாற்றிய ஆளுநர்கள், ஆர்க்காட்டு நவாபுகள் ஆகியோரது
பெரிய கண்கவர் ஓவிய உருவங்கள், இராபர்ட் கிளைவ் எழுதிய
கடிதங்கள், பிரெஞ்சுக்காரர்கள் உபயோகித்த விளக்குகள்,
பீங்கான் பாத்திரங்கள், பிரெஞ்சுத் தலைவர்களின் படங்கள்,
மைசூரை ஆட்சிபுரிந்த உடையார்களின் வரலாற்றைக் குறிக்கும்
சிற்பம்,