இக்கோவிலின் பிரகாரத்தில் நரசிம்மர்-இரணியன் போரைக்
குறிக்கும் ஒற்றைக் கல்லினாலான பெரிய சிற்பங்கள் உள்ளன.
திருக்கோஷ்டியூர் கோவில், முன்னோர் நமக்கு விட்டுச்
சென்றுள்ள மரபுரிமைச் செல்வங்களில் ஒன்றாகும்.
@@@@@@
26. இராமேஸ்வரம்
நமது இந்தியப் பண்பாட்டின் பெருமைக்குரிய முக்கியத்
தலங்களில் இராமேஸ்வரம் ஒன்றாகும். இராமேஸ்வரத்தின்
புகழுக்குக் காரணம் இங்குள்ள இராமநாத சுவாமி கோவில்
ஆகும்.
கோவிலின் அமைப்பும் வரலாறும்
இராமநாத சுவாமி கோவில் இராமேஸ்வரம் தீவின் ஒரு
பகுதியில் அமைந்துள்ளது. இலங்கைமீது படையெடுத்து
இராவணாதி அரக்கர்களை வென்று, அயோத்திக்குத் திரும்பும்
வழியில், இராமபிரான் இராவணனைக் கொன்றதனால் ஏற்பட்ட
பழியினைப் போக்கிக்கொள்வதற்கு இராமேஸ்வரத்தில்,
இறைவனை வழிபட்டார் என்றும், சீதாப்பிராட்டியினால்
மணலில் அமைக்கப்பட்ட சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து
வழிபட்டார் என்றும் புராணவாயிலாக அறியப்படுகிறது.
கி.பி. 12ஆம் நூற்றாண்டிற்கு முன் இக்கோவில் சிறு அளவினதாய்
இருந்தது எனப்படுகிறது. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இலங்கை
மன்னன் பராக்கிரமபாகு இக்கோவிலின் கருவறையிலும்
அம்பிகை கோவிலிலும் சில திருப்பணிகள் புரிந்தார். விஜயநகர
இளவரசர் குமார கம்பணர், தமது மதுரை வெற்றியையடுத்து
(கி.பி. 1371) இராமேஸ்வரம் கோவிலுக்கு வருகை தந்தார்
என்று கூறப்படுகிறது. மதுரை நாயக்க அரசைத் தோற்றுவித்த
விஸ்வநாதரும், அவர் வழிவந்த சிலரும் இக்கோவிலில் சில
திருப்பணிகள் புரிந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சேதுபதி மன்னர்களின் திருப்பணிகள்
இராமநாதபுர சேதுபதி மன்னர்கள், தங்கள் ஆட்சிப்
பகுதியிலிருந்த இராமேஸ்வரம் கோவிலில் ஏராளமான
திருப்பணிகள் ஆற்றியுள்ளனர். இவர்கள் இராமேஸ்வரம்
கோவிலின் தர்ம கர்த்தாக்களாக இருந்தனர். பல
கிராமங்களின் வருமானத்தை இக்கோவிலுக்கு அளித்தனர்.
இக்கோவிலில் பின்வரும் கட்டடப் பகுதிகளை எழுப்பினர்.
|