பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்291

1. சடைய்க்கத் தேவர் என்ற உடையான் சேதுபதி
கி.பி. 1618இல் இராமநாதசாமி கருவறை, அர்த்த மண்டபம்,
பர்வதவர்த்தினி அம்மன் கருவறை ஆகியவற்றைத்
திரிகோணமலையிலிருந்து கொண்டுவரப்பட்ட கருங்கற்களால்
புதுப்பித்துக் கட்டினார்.

2. நந்தி மண்டபமும் முதல் பிரகாரத்திலுள்ள அர்த்த
மண்டபமும் கூத்தன் சேதுபதியால் கி.பி. 1623இல் கட்டப்பட்டது.

3. தளவாய் சேதுபதி (1636-1645) அனுமார் சந்நிதியைக்
கட்டினார். கோவிலின் கிழக்குக் கோபுரத்தின் ஒரு பகுதியைக்
கட்டினார். மூன்றாம் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையிலுள்ள
சபாபதி சந்நிதியையும் அமைத்தார்.

4. இரகுநாத சேதுபதி (1645-1670) என்ற திருமலை
சேதுபதி இலட்சுமண சுவாமி கோவிலின் திருப்பணியை
மேற்கொண்டார். கோவிலின் திருமதில் இவர் காலத்தில்
புதுப்பித்துக் கட்டப்பட்டது.

5. விஜயரகுநாத சேதுபதி (1710-1720), அம்மன்
கோவில் பள்ளியறையையும், முன் மண்டபத்தையும்
கி.பி. 1715இல் கட்டினார்.

6. முத்துவிஜயரகுநாத சேதுபதி (1735-1746) கி.பி. 1740இல்
பிரசித்திபெற்ற மூன்றாம் பிரகாரம் அமைக்கும் பணியைத்
தொடங்கினார்.

7. முத்துராமலிங்க சேதுபதி (1761-1772-1781-1794),
மூன்றாம் பிரகாரக் கட்டட வேலையை கி.பி. 1769இல் முற்றுப்பெறச் செய்தார்.

8. கிழக்குக் கோபுர வாயிலருகிலுள்ள சேதுபதி மண்டபம்
இராமநாத சேதுபதி
யால் 1974ஆம் வருடம் கட்டப்பட்டது.

சேதுபதி மன்னர்களைத் தவிர இராமேஸ்வரம் கோவிலில
திருப்பணியாற்றிய ஏனையோரில் குறிப்பிடத்தக்கவர்கள்
நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் ஆவர். தேவகோட்டை
AL.AR.