பக்கம் எண் :

292தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

அருணாசலம் செட்டியார் (1868-1933) குடும்பத்தினர்
நிதியிலிருந்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு (1897-1904)
முற்றுப்பெறா நிலையிலிருந்த, கிழக்குக் கோபுரம் கட்டி
முடிக்கப்பட்டது. இக்குடும்பத்தினர் 1907-1925 ஆண்டு
காலத்தில் சுவாமி-அம்மன் முதற்பிரகாரத் திருப்பணி
வேலையை மேற்கொண்டனர். நாட்டுக்கோட்டை
நகரத்தார்களால் குடமுழுக்கு விழா இக்கோயிலில் 1925ஆம்
ஆண்டு நடைபெற்றது.

1947ஆம் ஆண்டில் இக்கோவிலின் மற்றொரு குட முழுக்கு
விழா நடைபெற்றது. இக்கோவிலின் சிறப்புமிக்க குடமுழுக்கு விழா
5-2-1975 அன்று நடைபெற்றது.

கோவிலின் சிறப்புகள்

1. மூலவர் இராமநாதர் கருவறையில் லிங்க வடிவில்
காட்சியளிக்கிறார். கருவறை லிங்கம் சீதாப்பிராட்டியாரால்
அமைக்கப்பட்டு, இராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்டு
வழிபடப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்தியாவிலுள்ள
12 ஜோதி லிங்கங்களுள் ஒன்றாக இராமேஸ்வர லிங்கம்
சிறப்புப் பெற்றுள்ளது. தவிர, கருவறை லிங்கத்திற்கு அருகில்
அனுமன் கொண்டுவந்ததாகக் கூறப்படும் ‘விசுவலிங்கம்’ உள்ள
விசுவநாதர் சந்நிதி, பர்வதவர்த்தினி சந்நிதி,
சுக்கிரவார
மண்டபத்திலுள்ள தெய்வங்கள், கோவிலிலுள்ள இதர துணைத்
தெய்வங்கள் யாவும் சிறப்புடையனவாகக் கருதி வழிபடப்
படுகின்றன. சிறப்புடைய தீர்த்தங்கள் பல இங்கு உள்ளன.

2. இராமாயணத் தொடர்புடைய இராமலிங்கத்தை
வழிபட இந்தியாவின் பல்வேறு மொழிகள் பேசும் மக்கள்,
பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வருகின்றனர். எனவே,
இராமேஸ்வரக் கோவிலை இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்குரிய
ஒரு சிறந்த சின்னமாகக் கருதலாம்.

3. இராமஸ்வரக் கோவிலின் கட்டடக் கலைச் சிறப்புமிக்க
பகுதி, அதன் நீண்ட மூன்றாம் பிரகாரம் (Corridor) ஆகும்.
இம் “மூன்றாம் பிரகாரம் உலகிலேயே மிக நீண்டது” என்ற
பெருமையைப் பெற்றுள்ளது. இப்பிரகாரத்தின் நான்கு