பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்307

காளையார் கோவில்

சிவகங்கையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் காளையார்
கோவில் என்ற ஊர் உள்ளது. இதன் பண்டைய பெயர் கானப்பேர்
ஆகும். சங்ககாலப் பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதி இந்த
இடத்தை ஆண்டுவந்த வேங்கை மார்பன் என்ற மன்னனை
வென்று ‘கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி’ என்ற
சிறப்புப் பெயரைப் பெற்றார். பாண்டியர் ஆட்சிக்குப்பின் மதுரை
நாயக்க மன்னர்கள், இராமநாதபுர சேதுபதி மன்னர்கள்,
சிவகங்கை மன்னர்கள் ஆகியோரின் ஆட்சியில் இவ்வூர்
வந்தது. காளையார் கோவில் மருது சகோதரர்களுக்கு ஒரு
பலம்மிக்க இராணுவக் கோட்டையாக இருந்தது. இவர்கள்
ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய பொழுது (1800-1810)
காளையார் கோவில் ஒரு முக்கிய போர்க்களமாக இருந்தது.
1801, அக்டோபர் 1இல் ஆங்கிலேயர்கள் காளையார்
கோவிலைக் கைப்பற்றினர்.

காளையார் கோவிலில் பழமைமிக்க சிவாலயம் ஒன்று
உள்ளது. காளீஸ்வரர், சோமேஸ்வரர், சுந்தரேஸ்வரர்
என்று மூன்று தெய்வங்களின் சந்நிதிகள் இவ்வாலயத்தில்
உள்ளன. காளீஸ்வரர் சந்நிதியிலுள்ள ‘கருவறை லிங்கம்’
தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். இங்குள்ள அம்மன் சொர்ணவல்லி
ஆவார். சோமேஸ்வரர் சந்நிதிக்கு எதிரிலுள்ள இராஜ கோபுரம்
மருது சகோதரர்களால் கட்டப்பெற்றதாகும் (கி.பி. 18ஆம்
நூற்றாண்டு). சோமேஸ்வரர் ஆலயத்தின் அம்மன் சௌந்திர
நாயகி எனப்படுகிறார். இவ்வம்மனின் கருவறை சிற்ப
வேலைப்பாடு மிக்கதாகும். காளீசுவரர் சந்நிதி முன்னுள்ள
கோபுரமும், சுந்தரேசுவரர்-மீனாஷி ஆலயமும் வரகுண
பாண்டியன்
திருப்பணியாகும். சிவகங்கை தேவஸ்தானத்தைச்
சேர்ந்த இக்கோவிலுக்கு தேவகோட்டை நகரத்தார்கள் சீரிய
திருப்பணி ஆற்றியுள்ளனர்.

காளீஸ்வரர் சந்நிதி வாயிலருகில் பெரிய மருது, சின்ன
மருது ஆகியோரின் ஆளுயரச் சிற்பங்களும், சேதுபதி
மன்னரின்