பக்கம் எண் :

308தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

உருவமும் உள்ளன. இச்சந்நிதிக்கு எதிரிலுள்ள ‘மருது
பாண்டியன் வீதி‘யின் கடைசியில் மருது சகோதரர்கள்
உடலின் ஒரு பாகம் அடக்கம் செய்யப்பட்டு எழுப்பப்பட்ட
கல்லறை உள்ளது.

திருவாடானை

சிவகங்கையிலிருந்து 58 கி.மீ. தொலைவில் திருவாடானை
உள்ளது. இங்கு ஒரு சிறந்த சிவாலயம் உள்ளது. இறைவன்
ஆதிரத்னேஸ்வரர் என்றும், இறைவி சிநேகவல்லியம்மாள்
என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோவில் பாண்டிய மன்னர்கள்,
மதுரை நாயக்க மன்னர்கள், இராமநாதபுர சேதுபதி ஆகியோரின்
திருப்பணிகளைக் கொண்டுள்ளது. இங்குள்ள சொக்கட்டான்சேரி
மண்டபம்
சிற்ப வேலைப்பாடுமிக்கது.

இடைக்காட்டூர்

சிவகங்கையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் இடைக்காட்டூர்
உள்ளது. இவ்வூரில் தொன்மைமிக்க சிவாலயம் உள்ளது.
இறைவன் ஆதிகண்டீஸ்வரர் எனப்படுகிறார்.

இடைக்காட்டூரில் புனித நெஞ்சக் கிறித்தவ ஆலயம்
உள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தந்தை பெர்டினாந்து
(Ferdinandus Celle) என்பவர் இவ்வாலயத்தைக் கட்டத்
தொடங்கினார். 1864இல் இது கட்டி முடிக்கப்பட்டது. சிலுவை
வடிவத்தில் கட்டப்பட்டுள்ள இவ்வாலயம் ‘கோதிக்’
கலையம்சங்களைக் கொண்டுள்ளது. கட்டடக் கலைச் சிறப்புமிக்கது.

திருச்சுழி

சிவகங்கையிலிருந்து 50 கி.மீ. தொலைவில் திருச்சுழி
உள்ளது. பாண்டிய நாட்டின் பாடல்பெற்ற 14 சிவத்தலங்களில்
இது ஒன்றாகும். ‘திருச்சுழியல்’ என்ற பெயர் மருவி திருச்சுழி
என வழங்கப்படுகிறது. சைவ சமயக் குரவர்கள் நால்வராலும்,
இத்தலம் பாடப்பெற்றுள்ளது. இத்தலத்தைச் சுந்தரமூர்த்தி
சுவாமிகளும், அவர் ஆருயிர் நண்பர் சேரமான் பெருமானும்