பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்309

வந்து வழிபட்டனர் என்பர். இக்கோவிலின் இறைவன்
திருமேனி நாத சுவாமி
ஆவார். அம்மன் துணை மாலை
நாயகி
எனப்படுகிறார். இறைவனின் கருவறையும், அம்மனின்
கருவறையும் பாண்டிய மன்னர்களின் திருப்பணியாகும். சுவாமி
சந்நிதி கம்பத்தடி மண்டபம் கி.பி. 18ஆம் நூற்றாண்டில்
முத்துக்கருப்பணன் சேர்வை என்பவரால் கட்டப்பட்டது.
கோபுரம் முத்துநாயக்கர் என்பவரால் கட்டப்பட்டது.
இராமநாதபுர மன்னர்களின் திருப்பணிகள் பல இக்கோவிலில்
உள்ளன. கோவிலின் வடமேற்கில் பிரளயவிடங்கர் கோவில்
உள்ளது. இக்கோவில் தும்பிச்சி நாயக்கரின் திருப்பணியைக்
கொண்டுள்ளது. இக்கோவில் தேவகோட்டை சுப்பிரமணியஞ்
செட்டியார் அவர்களால் திருப்பணி செய்யப்பட்டு 1957 ஆம்
ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. தேவகோட்டை
அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் முயற்சியால்
1892இல் இக்கோவிலின் திருப்பணி நடைபெற்றுள்ளது.
கோவிலின் வடகிழக்கில் பழனியாண்டவர் சந்நிதி உள்ளது.
நாடார் சமூகத்தினர் மற்றும் பலரின் திருப்பணிகளும்
இக்கோவிலில் உள்ளன.

கலைச்சிறப்பு

தமிழ்நாட்டின் பழம் பெருங் கோவில்களில் திருச்சுழி
திருமேனிநாத சுவாமி கோவில் ஒன்றாகும். சுவாமி, அம்மன்
கருவறைகள் முற்றிலும் கல்லினால் ஆனவை. இவற்றின்
சுவர்கள் சிற்ப வேலைப்பாடுமிக்கவை. பாண்டிய மன்னர்களின்
சிற்பக் கலைத்திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக இவை
விளங்குகின்றன. இக்கோவிலின் பிரகாரங்களில் உயரமான
அதிட்டான மேடைமீது நிறுவப்பட்டுள்ள பெரிய கற்றூண்கள்
தமிழகக் கோவிற் கட்டடக் கலைத்திறனுக்கு
எடுத்துக்காட்டுகளாகும். தூண்களில் வெள்ளைப்
பூசப்பட்டிருப்பதால் அவற்றின் இயற்கை அழகைக் காண
முடியவில்லை. கம்பத்தடி மண்டபத்தின் அருகிலுள்ள சில
தூண்களில், சிங்கத்தின் வாயில் காணப்படும் சுழலும் நிலையிலுள்ள
கல் உருண்டைகள், சிற்ப அதிசயங்களாகும். பழனியாண்டவர்
சந்நிதிச் சுவரிலுள்ள இரு புடைப்புச் சிற்பங்கள் அளவில்
சிறியனவாக இருப்பினும்