6. மகாவிஷ்ணு
7. மன்மதன்
8. வீரபத்திரர்
9. 10. பாவைகள்
மேற்கூறிய சிலைகள் யாவும் ஒற்றைக் கல்லினாலானவை.
நுட்பமான வேலைப்பாட்டினைக் கொண்டுள்ளன. இவை பாண்டியர்
காலச் சிற்பிகளின் உன்னத படைப்புகளாகும். அளவிலும்,
அழகிலும் இச்சிற்பங்களுக்கு இணையாகத் தமிழ் நாட்டில்
வேறு எங்கும் இல்லை எனலாம்.
பால முருகன் சந்நிதி முன்னுள்ள மண்டபத்தில் காணப்படும்
தர்மன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், கர்ணன்
ஆகியோரின் சிற்ப உருவங்கள் ஒற்றைக் கல்லில் வடிக்கப்பட்டு
அழகுடன் காட்சியளிக்கின்றன.
காசி விஸ்வநாதரின் சந்நிதி முன்னுள்ள மண்டபத்திலும்,
பால முருகன் சந்நிதி முன்னுள்ள மண்டபத்திலும்
இசைத்தூண்கள் உள்ளன. இக்கோவிலிலுள்ள கல்வெட்டுகள்
பல, இக்கோவிலின் தோற்றம், வளர்ச்சி, பிற செய்திகள்
ஆகியவற்றைத் தெரிவிக்கின்றன.
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலின் சிற்பங்கள்
பிற்காலப் பாண்டிய மன்னர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள
அரிய கலைச் செல்வங்களாகும்.
குற்றாலம்
தென்காசியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் குற்றாலம்
உள்ளது. குற்றாலத்தில் நமது பண்பாட்டின் பெருமைக்குரிய
சின்னம் இங்குள்ள குற்றாலநாதர் ஆலயம் ஆகும்.
குற்றாலநாதர் ஆலயம் மிகத் தொன்மை வாய்ந்த ஒன்றாகும்.
சோழ, பாண்டிய மன்னர்களால் இக்கோவில் உருவாக்கப்பட்டதாகக்
கூறப்படுகிறது. வடகரை ஆதிக்கம் பெரியசாமி செம்புலி
சின்னணைஞ்சாத் தேவர் (கி.பி. 1660-1721)
|