பக்கம் எண் :

328தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்கள் அமைத்த
ஒற்றைக் கற்கோவில்கள்
உள்ளன. கழுகுமலையில் பாண்டிய
மன்னர் அமைத்த ஒற்றைக் கற்கோவில் உள்ளது. மாமல்லபுரத்தில்
ஒற்றைக் கற்கோவில்கள் எனப்படும் ஐந்து கல் ரதங்கள்,
அங்கு முன்பிருந்த குன்றைச் செதுக்கி அமைக்கப்பட்டனவாகும்.
கழுகுமலை வெட்டுவான் கோவிலும் மலையைக் குடைந்து
அமைக்கப்பட்ட ஒரு கற்கோவிலாக இருப்பினும், இக்கோவில்
வடிக்கப்பட்ட பின், துண்டிக்கப்பட்ட மலையும் கோவிலருகில்
காணும்படியாக உள்ளது. இதுபோன்ற அமைப்புள்ள
கற்கோவில் தமிழகத்தில் இது ஒன்றுதான். மலையின்
உச்சிப்பகுதி, செதுக்கப்பட்டு, கோவிலின் விமானப்
பகுதியாக அமைந்திருப்பதையும், கோவில் உருவான பின்,
வெட்டி எடுக்கப்பட்ட மலையின் அடிப்பாகம் கோவிலின்
பிரகாரமாகவும் அமைந்துள்ளது. துண்டிக்கப்பட்ட மலையின்
உச்சியிலிருந்து பார்க்கும்பொழுது, மலையில் செதுக்கி
அமைக்கப்பட்ட ‘வெட்டுவான் கோவில்’ பள்ளத்தில்
உள்ளதுபோல் காட்சியளிக்கிறது. இதுபோன்ற கோயிற்கலை
அமைப்பு
தமிழகத்தில் வேறெங்கும் இல்லை. மகாராஷ்டிர
மாநிலத்திலுள்ள, இராஷ்டிரகூடர்களால் உருவாக்கப்பட்ட
எல்லோராவில் கைலாசநாதர் கோவிலில் இதுபோன்று
காணப்படுவதால் கழுகுமலை வெட்டுவான் கோவில்
‘தென்னக எல்லோரா’ எனப்படுகிறது.

வெட்டுவான் கோவிலில், ஓர் இந்துக் கோவிலுக்குரிய
அம்சங்களான, பிரகாரம், அதிட்டானம், விமானம், கருவறை,
அர்த்த மண்டபம், தெய்வங்கள் ஆகிய யாவும்,
மலைப்பாறையிலேயே அமைக்கப்பட்டுள்ளன. கற்கோவிலுக்கும்,
மலைக்கும் இடையிலுள்ள குடைந்தெடுக்கப்பட்ட பகுதி,
கோவிலின் வெளிப்பிரகாரமாக உள்ளது. கருவறையும்,
அர்த்த மண்டபமும், மலையின் உட்பகுதி குடையப்பட்டு
அமைக்கப்பட்டுள்ளன. மலையைக்குடைந்து பெரிய கற்கோவிலை
அமைத்த பாண்டிய நாட்டுச் சிற்பியின் திறமைதான் என்னே!

விமானத்தின் அடிப்பகுதியும், அர்த்தமண்டபமும்
முற்றுப்பெறா நிலையில் உள்ளன. விமானத்தின் உச்சிப்பகுதி