பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்345

ஆர்க்காட்டு நவாபுகளின் ஆட்சியில் வந்தன. ஆர்க்காட்டு
நவாபுகளின் ஆட்சி தமிழ்நாட்டில் கி.பி. 1801 வரை இருந்தது.
ஆனால், நவாப் முகமதலி ஆங்கிலக் கிழக்கிந்தியக்
கம்பெனியாரிடம் அதிகக் கடன்பட்டதால் தமது பிரதேசத்தில்
வரி வசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயருக்குக் கொடுத்து
விட்டார். இதனால் ஆங்கிலேயரின் ஆதிக்கம் 18ஆம்
நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே ஏற்பட்டது. ஆங்கிலக்
கிழக்கிந்தியக் கம்பெனியார் பாளையங்கோட்டையில் ஓர்
இராணுவத்தை நிறுத்தி வைத்திருந்தனர். கி.பி. 1801 முதல்
தமிழகம் முழுவதும் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின்
ஆட்சியின்கீழ் வந்தது. திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஓர்
ஆங்கில மாவட்ட ஆட்சியாளர் நியமிக்கப்பட்டார்.

கி.பி. 1844இல் திருநெல்வேலி நகருக்கும்
பாளையங்கோட்டை நகருக்கும் இடையில் தாமிரவருணி நதியில்
‘சுலோசன முதலியார் பாலம்’ கட்டப்பட்டது. திருநெல்வேலி
சிரஸ்தாராகப் பணியாற்றிய T.சுலோசன முதலியார் இப்பாலம்
அமைப்பதற்கான செலவுத் தொகையைக் கொடுத்ததால் அவர்
பெயரால் பாலம் அழைக்கப்படுகிறது. ஹோர்ஸ்லே என்பவரால்
இப்பாலம் அமைக்கப்பட்டது. இப்பாலம் திருநெல்வேலி,
பாளையங்கோட்டை நகரங்களை ‘இரட்டை நகரங்களாக்கியது’
கி.பி. 1869இல் ஏற்பட்ட கடும் வெள்ளத்தினால் இப்பாலத்தின்
ஒரு பகுதி அழிந்தது. இப்பாலம் 1871-72இல் பழுது பார்த்துக்
கட்டப்பட்டது.

கி.பி. 1866இல் திருநெல்வேலி நகரில், நகராட்சிமுறை
ஏற்பட்டது. நெல்லையப்ப சுவாமி கோவிலை மையமாகக்
கொண்டது இந்நகரின் பழைய பகுதியாகும். கி.பி. 1904ஆம்
ஆண்டு இந்நகருக்கு இருப்புப்பாதைப் போக்குவரவு
தொடங்கியது. இருப்புப்பாதை நிலையத்தை அடுத்துப்
புதிய நகர்ப்பகுதி எழுந்தது. 1973ஆம் ஆண்டு இந்நகரில்
சுலோசன முதலியார் பாலம் அருகில் ‘திருவள்ளுவர் பாலம்’
என்ற ஈரடுக்குப் பாலம் கட்டப்பட்டது. 1981, ஏப்ரல் முதல்
இந்நகருக்கும் நாகர்கோவில் நகருக்கும் இருப்புப்பாதைப்