பக்கம் எண் :

344தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

35. திருநெல்வேலி

பாண்டிய நாட்டின் ஒரு முக்கிய நகர் திருநெல்வேலி
ஆகும். இத் ‘தென்பாண்டி நகர்’ தாமிரவருணி நதியின்
கரையில் அமைந்துள்ளது. வேதசன்மன் என்னும் அந்தணர்
நைவேத்தியத்துக்காக உலர வைத்த நெல்லை, மழை பெய்து
வெள்ளம் அடித்துப் போகாவண்ணம் சிவபெருமான் வேலி
கட்டிக் காத்தருளினபடியால் ‘திருநெல்வேலி’ என்ற பெயர்
உண்டாயிற்று என்பது தலபுராணச் செய்தியாகும்.

இன்றைய திருநெல்வேலி நகர்ப்பகுதி சங்க காலப்
பாண்டிய மன்னர்கள், கடுங்கோன் வழிவந்த பாண்டிய
மன்னர்கள் ஆகியோரின் ஆட்சியில் இருந்தது. தஞ்சைச்
சோழர்களின் எழுச்சியால், இந்நகர்ப்பகுதியும், பாண்டிய நாட்டின்
இதர பகுதிகளும் சோழர் ஆதிக்கத்தின்கீழ் வந்தன. இரண்டாம்
இராஜாதிராஜன்
(1146 - 73) ஆட்சியின் இறுதியில்
திருநெல்வேலியைத் தலைநகராகக்கொண்டு ஸ்ரீவல்லபன் என்ற
பாண்டிய மன்னரின் மகன் குலசேகரன் ஆட்சி புரிந்தார்.
இவர் சோழ மன்னரின் உதவி பெற்று மதுரை மன்னரானார்.
கி.பி. 1190இல் ஆட்சிக்கு வந்த சடையவர்மன் குலசேகரன்,
தஞ்சைச் சோழரின் பிடியிலிருந்து பாண்டிய நாட்டை விடுவித்து
ஆட்சி புரியலானார். கி.பி. 14ஆம் நூற்றாண்டில் மதுரைப்
பாண்டிய மன்னர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்து இஸ்லாமியர்
ஆட்சி ஏற்பட்டது. இதன் பின் வந்த பாண்டியர்களுள்
சிலர் திருநெல்வேலியைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி
புரிந்தனர்.

விஸ்வநாதரால் மதுரை நாயக்க அரசு ஏற்படுத்தப்பட்ட
பொழுது, திருநெல்வேலி நகரும் இவ்வரசின்
ஆட்சிக்குட்பட்டிருந்தது. விஸ்வநாதர் ஆட்சிக் காலத்தில்
திருநெல்வேலி நகர் புதுப்பித்து அமைக்கப்பட்டது. இவர்
வழிவந்த மன்னர்கள் காலத்தில் இந்நகர் தென்திசைப்
பகுதியின் தலைநகராக விளங்கிற்று. மதுரை நாயக்க அரசின்
வீழ்ச்சியை அடுத்து (கி.பி.1736), இந்நகர்ப்பகுதியும் தமிழகத்தின்
இதர பகுதிகளும்