பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்343

1799) ஆங்கிலேயர்கள், தங்கள் வலிமைமிக்க படை
வலிமையினால் பாஞ்சாலங்குறிச்சியை அழித்தனர்.

கட்டபொம்மன் நினைவுக் கோட்டை

பாஞ்சாலங்குறிச்சிப் பகுதியிலிருந்த மண்மேட்டை, தமிழ்நாடு
அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையினர் அகழ்ந்து, சில
கட்டடப் பகுதிகளைக் கண்டனர். பாஞ்சாலங்குறிச்சியின் வீர
வரலாற்றை மக்கள் என்றும் நினைவுகூரும் வகையில், 1974ஆம்
ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான
தமிழ்நாடு அரசு பாஞ்சாலங்குறிச்சியில் ஒரு நினைவுக்
கோட்டையை எழுப்பியது. இந்த நினைவுக் கோட்டையின்
உட்பகுதியில் அன்றையக் கோட்டையின் ஓர் எஞ்சிய பகுதியாக,
ஒரு கட்டடத்தின் அடித்தளப்பகுதி மட்டும் உள்ளது. இதனருகில்
கட்டபொம்மனின் குலதெய்வம் எனக் கருதப்படும் ஜக்கம்மாள்
கோவில்
உள்ளது. நினைவுக்கோட்டை ஒரு மாடிக் கட்டடமாக
அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டடத்தினுள் கட்டபொம்மன்,
அவர் சகோதரர்கள் ஊமைத்துரை, செவத்தையா, அவர்
படைத்தலைவர் வெள்ளையத் தேவர், அவர் அமைச்சர்கள்,
சுந்தரலிங்கம் பிள்ளை, தானாபதிப் பிள்ளை ஆகியோருக்குச்
சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. கட்டபொம்மனின் வீர வரவாற்றைக்
கூறும் கருத்தோவியங்களும் இங்குக் காட்சிக்கு
வைக்கப்பட்டுள்ளன. பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைத்
தகர்க்க ஆங்கிலேயர் உபயோகித்த பீரங்கிக்குண்டுகள் சிலவும்
நினைவுக் கோட்டையின் கண்காணிப்பாளரிடம் பார்வைக்கு
உள்ளன.

பாஞ்சாலங்குறிச்சி நினைவுக் கோட்டையிலிருந்து 3 கி.மீ.
தொலைவில் 1801ஆம் ஆண்டில் மார்ச் 24, மே 24 ஆகிய
நாள்களில் நடைபெற்ற பாஞ்சாலங்குறிச்சிப் போரில் மரண
மடைந்த ஆங்கிலேயர்களது (45 வீரர்களின்) கல்லறைகள்
உள்ளன. ஊமைத்துரையுடன் நடந்த போரில் காலமான வீரர்களின்
கல்லறை என இவை அறியப்படுகிறது.