பக்கம் எண் :

342தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

ஒன்றுசேர்ந்து பாளையங்கோட்டை சென்று, பாளையங்கோட்டைச்
சிறைச்சாலையைத் தாக்கி ஊமைத்துரையையும் அவரது
தோழர்களையும் விடுவித்தனர் (1801, பிப்ரவரி 2).
சிறையிலிருந்து மீட்கப்பட்ட ஊமைத்துரை தம் ஆதரவாளர்கள்
சுமார் 5000 பேருடன் பாங்சாலங்குறிச்சியில் மீண்டும்
கோட்டையைக் கட்டத் தொடங்கினார். இரண்டே வாரங்களில்
கோட்டை மீண்டும் கட்டப்பட்டது. பாஞ்சாலங்குறிச்சியில்
புதிய கோட்டை கட்டப்பட்ட சம்பவம் இந்திய வரலாற்றில
போற்றத்தக்க ஒன்றாகும்.

ஆங்கிலேயரின் ஆதிக்கத்திற்குப் பணிய மறுத்த ஊமைத்துரை,
அதே நோக்கத்துடன் சிவகங்கையில் ஆட்சி புரிந்து வந்த மருது
சகோதரர்களிடம்
(வெள்ளை மருது, சின்ன மருது) நட்புக்
கொண்டார். தென்னிந்தியக் கலகத்தில் (1800-1801) பங்கு
பெற்றார். ஆங்கிலேயர்கள் மெக்காலே தலைமையில்
பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை இரண்டாம் முறையாகத்
தாக்கினர் (1801மார்ச்). கட்டபொம்மன் காலத்துக்
கோட்டையை விட, ஊமைத்துரை கட்டிய கோட்டை வலிமை
மிக்கதாக இருந்தது. இதனால் ஆங்கிலேயர் படை கோட்டையைத்
தாக்கியபோது வெற்றி காண முடியவில்லை. எனினும், இறுதியில்
ஆங்கிலேயரின் பீரங்கிகள் இக்கோட்டையை அழிப்பதில்
வெற்றி கண்டன (1801, மே 24). அக்னு என்ற ஆங்கிலத்
தளபதி பாஞ்சாலங்குறிச்சியைப் பிடித்தார். ஊமைத்துரை தப்பி
சிவகங்கை சென்றார். பின் அவரும் மற்றும் பலரும் கைது
செய்யப்பட்டுப் பாஞ்சாலங்குறிச்சியில் தூக்கிலிடப்பட்டனர்.
பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை தரை மட்டமாக்கப்பட்டது.
பாஞ்சாலங்குறிச்சி என்ற ஊரே தேசப் படத்தில் இருக்கக்கூடாது
என்று உத்தரவிடப்பட்டது.

தாங்கள் வாழும் மண்ணில் அன்னியரின் ஆதிக்கத்தை
ஏற்காது, அஞ்சா நெஞ்சத்துடனும், அளவுகடந்த வீரத்துடனும்,
கட்டபொம்மனும் அவர் சகோதரர் ஊமைத்துரையும்
ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட போதிலும், பீரங்கிப்
படை கொண்டு எதிர்த்த திப்புசுல்தானையும் வெற்றி கண்ட
(கி.பி.