பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்341

வெல்லெஸ்லி பிரபு என்ற கவர்னர்-ஜெனரல் ஆட்சியின்போது
(1798-1805) கட்டபொம்மனை அடக்கவும், பாளையக்காரர்களின்
படை பலத்தை நீக்கவும் முற்பட்டனர். இக்காலத்தில் எட்வர்டு
கிளைவ்
என்பவரே சென்னையின் ஆளுநராகப் பணியாற்றினார்.
பாளையக்காரர்களை அடக்கப் பானர்மேன் என்ற தளபதி
தலைமையில் ஒரு படை திருநெல்வேலியில் முகாமிட்டது.
தம்மைச் சந்திக்க வருமாறு தளபதி பானர்மேன்
கட்டபொம்மனுக்கு அழைப்பு விடுத்தார் (1799, செப்டெம்பர்
1). ஆனால், கட்டபொம்மன் அவரைச் சந்திக்க இயலாமை
குறித்துப் பதில் அனுப்பினார். இதைத் தொடர்ந்து பானர்மேனின்
படைகள் கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை
நெருங்கின. ஆனால், கட்டபொம்மன் ஆங்கிலேயருக்கு
அடிபணிய மறுத்துவிட்டர். இதனால் பானர்மேனின்
படைகளும். பீரங்கிகளும் பாஞ்சாலங்குறிச்சியின்
மண்கோட்டையைத் தாக்கின. கட்டபொம்மனின் படைகள்
வீரமாகப் போரிட்டன. ஆங்கிலப் படைத்தலைவர் காலின்ஸ்
வெள்ளையத் தேவனால் கொல்லப்பட்டார். இருப்பினும்
ஆங்கிலேயரின் வலுமிக்க படைமுன் கட்டபொம்மனின்
படைகள் வெற்றிபெற முடியவில்லை. இதனால்
கோட்டையிலிருந்து கட்டபொம்மனும், அவருடன் சிலரும்
தப்பிச் சென்றனர். ஆங்கிலப் படை பாஞ்சாலங்குறிச்சியைக்
கைப்பற்றியது. கட்டபொம்மன் முதலில் சிவகங்கைக்கும்,
பின் புதுக்கோட்டைக்கும் தப்பிச் சென்றார். ஆனால்,
புதுக்கோட்டைத் தொண்டைமானின் படைகள் கட்டபொம்மனைப்
பிடித்து ஆங்கிலேயரிடம் கொடுத்தன. பானர்மேன் கயத்தாறு
என்னுமிடத்தில் (பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து 24 கி.மீ.) 1799,
அக்டோபர் 16இல் ஒரு விசாரணை நடத்தி கட்டபொம்மனுக்குத்
தூக்குத் தண்டனை விதித்தார். பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை
இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.

கட்டபொம்மனின் மறைவுடன் பாஞ்சாலங்குறிச்சியின்
வீர வரலாறு முடிவுறவில்லை. கட்டபொம்மனின் சகோதரரான
குமாரசாமி என்ற ஊமைத்துரையும், சிவத்தையா என்ற துரை
சிங்க
மும் இதர சிலரும் பாளையங்கோட்டையில் சிறையில்
அடைக்கப்பட்டிருந்தனர். புரட்சி வீரர்கள் பலர் ரகசியமாக