ஒரு பகுதியான இராமலிங்க விலாசத்தில் கட்டபொம்மன்
ஜாக்சனைப் பேட்டி கண்டார். ஆனால், கட்டபொம்மனையும்
அவரது அமைச்சர் சிவசுப்ரமணிய பிள்ளையையும்
அமரவைத்துப் பேசாமல் அவர்கள் மனதை ஜாக்சன்
புண்படுத்தினார். கட்டபொம்மனைக் கைது செய்ய
முற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இராமலிங்க விலாசத்தை
விட்டுச் செல்லும்பொழுது கட்டபொம்முவின் படைவீரர்களுக்கும்.
ஆங்கில வீரர்களுக்கும் இடையில் சிறு சண்டை ஏற்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கிளார்க் என்ற ஆங்கிலப் படைத்தலைவர்
மாண்டார். கட்டபொம்மன், தமது சகோதரர் ஊமைத்துரை மற்றும்
தம்முடன் வந்தவர்களுடன் இராமநாதபுரக் கோட்டையைவிட்டு
வெளியேறிச் சென்றுவிட்டார். கட்டபொம்மனின் வீரர்களில்
தலைசிறந்த ஒருவரான வெள்ளையத்தேவன் இப்போராட்டத்தில்
பெரும் வீரராக விளங்கினார். ஆனால், பாஞ்சாலங்குறிச்சியின்
செயலாளரான சுப்பிரமணிய பிள்ளை, ஆங்கிலேயரால்
பிடிக்கப்பட்டுத் திருச்சிக்கு அனுப்பப்பட்டு, காவலில்
வைக்கப்பட்டார்.
எட்வர்டு கிளைவ் என்ற சென்னை ஆளுநர்
ஜாக்சனின் நடவடிக்கைகளைக் கண்டித்தார். இறந்த
கிளார்க் குடும்பத்தினருக்குக் கட்டபொம்மன் நஷ்டஈடு
தரவேண்டும் என்றும் அறிவித்தார். சுப்பிரமணி பிள்ளை
விடுவிக்கப்பட்டார். ஜாக்சன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு,
லூசிங்டன் என்பவர் இராமநாதபுரத்தின் புதிய
ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார்.
கட்டபொம்மன் ஜாக்சனை 9-9-1798இல் சந்திக்கும்முன்
தமது கப்பத்தொகைப் பாக்கியில் சுமார் மூன்றில் இரண்டு
பகுதியைக் கொடுத்துவிட்டார். ஆனால், ஆங்கிலேயரின்-
குறிப்பாக ஜாக்சனின்-அவமதிப்பிற்குரிய செயல்களினால்,
கட்டபொம்மன் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்துப்
போராடத் தொடங்கினார். தென்னாட்டுப் பாளையக்காரர்கள்
அமைத்திருந்த அணியில் சேர்ந்தார். தமது செல்வாக்கினால்
அந்த அணியின் முக்கியத் தலைவராகவும் விளங்கினார்.
இந்த அணியில் நாகலாபுரம், கோல்வார்பட்டி,
ஏழாயிரம்பண்ணை, காடல்குடி, குளத்தூர் ஆகிய
பாளையங்களுக்குரிய பாளையக்காரர்கள் சேர்ந்திருந்தனர்.
கட்டபொம்மனின் எழுச்சியை விரும்பாத ஆங்கிலக்
கிழக்கிந்தியக் கம்பெனியார்,
|