பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்339

ஆதி கட்டபொம்மன் ‘பாஞ்சாலன்’ என்ற தம் பாட்டன்
நினைவாகத் தமது தலைநகருக்குப் பாஞ்சாலங்குறிச்சி
என்று பெயரிட்டார் எனப்படுகிறது.

பாளையக்காரர்களிடமிருந்து வரி வசூலிக்கும் உரிமையைப்
பெற்ற ஆங்கிலேயர்கள் (1781), 1786ஆம் ஆண்டு வீரபாண்டியக்
கட்டபொம்மனின் தந்தையைப் (மூன்றாம் கட்டபொம்மன்)
பணிய வைக்கத் தளபதி புல்லர்டன் தலைமையில்
பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைத் தாக்கினர். கட்டபொம்மனும்
அவர் படை வீரர்களும் சிவகிரிக்குத் தப்பிச் சென்றனர்.
ஆனால், சிவகிரியும் முற்றுகையிடப்பட்டது. எனினும்
ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரால் புல்லர்டன்
அழைக்கப்படவே விரைவில் திறையைச் செலுத்துமாறு
எச்சரித்துவிட்டு அவர் சென்று விட்டார்.

1798ஆம் ஆண்டில் கட்டபொம்மன் செலுத்த வேண்டிய
கப்பத் தொகைப் பாக்கியைப்பெற ஆங்கிலேயர் முற்பட்டனர்.
நாட்டில் நிலவிய வறட்சி நிலை காரணமாகக் குறிப்பட்ட
காலத்தில் கட்டபொம்மன் தமது கப்பத் தொகையைக்
கட்டாமலிருந்ததாகத் தெரிகிறது. கப்பத் தொகைப் பாக்கியைப்
பெறும் விஷயம் குறித்துப் பேசும் நோக்கத்துடன் ஆங்கில
ஆட்சியாளர் ஜாக்சன் இராமநாதபுரத்திலுள்ள தமது
அலுவலகத்தில் இரண்டு வாரங்களுக்குள் தம்மைச்
சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு அழைப்பு விடுத்தார்.
கட்டபொம்மனும் தாம் ஆங்கிலேயருக்குக் கட்டவேண்டிய
கப்பத் (கிஸ்தி) தொகையைத் தயார் செய்துகொண்டு, ஜாக்சனைச்
சந்திக்கப் புறப்பட்டார். ஆனால், ஜாக்சன் இராமநாதபுரத்தை
விட்டுப் பல பாளையங்களுக்குச் சென்று கொண்டிருந்தார்.
ஜாக்சன் சென்ற இடங்களுக்கெல்லாம் கட்டபொம்மன்
பின்தொடர்ந்து சென்றார். ஆனால், ஜாக்சன் கட்டபொம்மனுக்குப்
பேட்டி கொடுக்கவில்லை. தம்மைக் காணவருமாறு அழைத்துவிட்டு,
23 நாள்களாகப் பலவாறு அலைய வைத்து, ஜாக்சன் கட்ட
பொம்மனைக் கஷ்டத்திற்குள்ளாக்கினார். இதையும் பொறுத்துக்
கொண்ட கட்டபொம்மன், ஜாக்சன் தம்மை 1798, செப்டெம்பர்
9இல் இராமநாதபுரத்தில் வந்து சந்திக்குமாறு கூறியதை
ஏற்று இராமநாதபுரத்திற்குச் சென்றார். சேதுபதி மன்னரின்
அரண்மனையில்