பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்357

‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ. சிதம்பரம் பிள்ளை
(1872-1936) ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு கப்பல் கம்பெனியைத்
தொடங்கி, கொழும்பிற்கும் தூத்துக்குடிக்கும் இடையில் கப்பல்
வாணிபத்தை நடத்தினார்.

தூத்துக்குடித் துறைமுகத்தில் கப்பல்கள் கரையிலிருந்து
5 கி.மீ. தொலைவில் கடலினுள் நிற்கவேண்டிய வசதிக் குறைவு
இருந்தது. இதனால் கப்பலிலிருந்து பொருள்களை ஏற்றவும், இறக்கவும்
சிறு படகுகள் பயன்படுத்தப்பட்டன. இக்குறையை நீக்கும்வண்ணம்
சுதந்தர இந்தியாவில் புதிய துறைமுகப் பகுதி (பழைய
துறைமுகத்திலிருந்து 8 கி.மீ.) விருத்தி செய்யப்பட்டது. துறைமுக
அபிவிருத்தித் திட்டம் நிறைவேற்றப்பட்டபின் தூத்துக்குடி ஒரு
சிறந்த துறைமுகமாயிற்று. 1974ஆம் ஆண்டு முதல் தூத்துக்குடி
இந்தியாவிலுள்ள 10 பெரிய துறைமுகங்களில் (Major ports)
ஒன்றாயிற்று.

உப்பு வாணிகத்திற்கும், மீன் பிடித்தலுக்கும், முத்துக்
குளித்தலுக்கும் பெயர் பெற்று விளங்கும் தூத்துக்குடியில்
‘ஸ்பிக்’ (SPIC) என்ற உரத் தொழிற்சாலை புதிய துறைமுகம்
அருகில் ஏற்படுத்தப்பட்டது. அனல் மின்சக்தி உற்பத்தி
நிலையம்
1981ஆம் ஆண்டுமுதல் இங்கு செயல்படத்
தொடங்கியது.

தூத்துக்குடி நகரிலுள்ள கத்தோலிக்கக் கிறித்தவ
ஆலயங்களில் புகழ்பெற்றவை இரண்டு. அவை 1. திவ்வியப்
பனிமய நாயகி தேவாலயம், 2. புனித நெஞ்சத் தேவாலயம்.

கடற்கரைச் சாலையிலுள்ள திவ்வியப் பனிமய நாயகி
தேவாலயம். கி.பி. 1558இல் தோன்றியது. கி.பி. 1710இல் சுவாமி
விஜில் மாஞ்ச் என்பவர் காலத்தில் புனிதபனிமய மாதா ஆலயக்
கட்டடப்பணி தொடங்கப்பெற்று கி.பி. 1711இல் முற்றுப்பெற்றது.
இவ்வாலயத்திற்குரிய மாதாவின் திருவுருவமும் கட்டடத்திற்கு
வேண்டிய பளிங்குக் கற்களும் இத்தாலி நாட்டிலிருந்து
கொண்டுவரப்பட்டன. “பெரிய கோவில்” என்ற சிறப்புப்
பெயரை இது பெற்றது. இவ்வாலயத்தின் பின் பகுதியில்
டச்சுக்காரர்களின் கல்லறை உள்ளது.