புனித நெஞ்சத் தேவாலயம் தூத்துக்குடி இருப்புபாதை
நிலையம் அருகில் உள்ளது. கஸ்தானியர் சுவாமி
முயற்சியால்
முதலில் ஓலைக் கோவில் அமைக்கப்பட்டது. கனோஸ்
சுவாமிகள், பிச்சினெல்லி சுவாமிகள், கபோஸ் சுவாமிகள்
ஆகியோர் புதிய ஆலயம் உருவாவதற்குக் காரணமாக இருந்தனர்.
கட்டடக் கலைஞர் லமோத் என்பவர் மூன்று ஆண்டுகளாக ஈடுபட்டு
கி.பி. 1852இல் ஆலய வேலையை முற்றுப்பெறச் செய்தார்.
இயேசுவின் திரு இருதயத்திற்கும், மரியாவின் இருதயத்திற்கும்
இது அர்ப்பணிக்கப்பட்டது. இது ஆசனக் கோவில்
எனப்பட்டது.
மார்டின் சுவாமிகள், அங்கிலட் சுவாமிகள் காலத்தில்
இவ்வாலயம் விரிவுபடுத்தி அழகுபடுத்தப்பட்டது.
ரோச்
ஆண்டகை அவர்கள் 1948ஆம் ஆண்டில் இவ்வாலயத்திற்கு
வானளாவிய கோபுரத்தை எழுப்பினர். தூத்துக்குடி நகரின் மிக
உயர்ந்த சிகரமாக விளங்கும் இவ்வாலயம், கிறித்தவக்
கட்டடக் கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
புனித அந்தோணியர்
ஆலயம், புனித சூசையப்பர் ஆலயம்,
புனித சார்லஸ் ஆலயம், புனித இஞ்ஞாசியர்
ஆலயம் ஆகியவை
தூத்துக்குடி நகரிலுள்ள இதர கத்தோலிக்க ஆலயங்களாகும்.
டச்சுக்காரர்களால் கி.பி. 1750இல் கட்டப்பட்டுப் பின்
ஆங்கில ஆலயமான, புனித திரித்துவ ஆலயம், புனித
பீட்டர் ஆலயம், புனித பேட்ரிக் ஆலயம், புனித
லூக்காவின்
ஆலயம் ஆகியவை தூத்துக்குடி நகரிலுள்ள சீர்திருத்த
சபையினருக்கான கிறித்தவ ஆலயங்களாகும்.
நகரின் மத்தியிலுள்ள
சங்கர ராமேஸ்வரர் என்ற சிவன்
கோவிலும், இதையடுத்துள்ள பெருமாள் கோவிலும், சந்தன
மாரியம்மன் கோவிலும் தூத்துக்குடி நகரில் இந்துக்களுக்கான
முக்கிய வழிபாட்டுத் தலங்களாகும்.
சாயர்புரம்
தூத்துக்குடியிலிருந்து 23கி.மீ.
தொலைவில் (தூத்துக்குடி
ஸ்ரீவைகுண்டம் சாலையில்) சாயர்புரம் உள்ளது.
இவ்வூர்
|