தோன்றக் காரணமாயிருந்தவர் சாமுவேல் சாயர் (1776-1815)
என்பவர் ஆவார். கிறித்தவர்களின் அமைதியான நல்வாழ்விற்காக,
ஒரு பரந்த நிலப்பகுதியை விலைக்கு வாங்கி, அதில்
அவர்களைக்
குடியேரும்படி சாமுவேல் சாயர் செய்தார் (1814)
கிறித்தவர்களுக்கு
அடைக்கலம் அளித்த சாமுவேல் சாயரை நினைவுகொள்ளும்
வகையில் அவர் தோற்றுவித்த கிராமம் சாயர்புரம்
ஆயிற்று.
தமிழ் மொழிக்குத்
தொண்டாற்றிய மேல்நாட்டு அறிஞர்களில்
குறிப்பிடத்தக்க ஒருவர், ஜி.யு. போப் (1820-1908) ஆவார். கிறித்தவ
சமயப் பணிக்காகக் கி.பி. 1839இல் தமிழகத்திற்கு வந்த இவர்,
தமிழக
வரலாற்றிலும், தமிழ் மொழியின் வரலாற்றிலும்,
சிறந்த இடத்தைப்
பெற்றுள்ளார். இவர் கி.பி. 1842இல் சாயர்புரம் வந்தார். போப்பின்
வருகையிலிருந்து சாயர்புரம் மிக்க புகழடையலாயிற்று. கி.பி. 1844
இல்
இங்கு இவர் ஒரு பள்ளியை நிறுவினார். பல ஐரோப்பிய மொழிகளை
மக்களுக்குக் கற்பித்தார். இப்பள்ளி கிறித்தவ மத
குருக்களையும்,
ஆசிரியர்களையும் உண்டு பண்ணியது. சுப்ரமணியபுரத்தில்
(சாயர்புரம் அருகிலுள்ளது) கி.பி. 1846இல் சகல
பரிசுத்தவான்கள்
ஆலயத்தை போப் கட்டினார்.
திருக்குறளை உலகறியச்
செய்த பெருமை போப்
அவர்களையே சேரும். கி.பி. 1886இல் திருக்குறளின்
ஆங்கில
மொழிபெயர்ப்பை இவர் வெளியிட்டார். 1893இல் நாலடியாரையும்,
1900இல் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் வெளியிட்டார்.
புனிதத் திரித்துவ
ஆலயம் : சாயர்புரத்தில் சீர்திருத்திய
கிறித்தவ சபையினருக்கான அழகிய ஆலயம் புனிதத் திரித்துவ
ஆலயம் (Holy Trinity
Church) ஆகும். ஹக்ஸ்டபிள் என்ற
பெரியார் கி.பி. 1857இல் இவ்வாலயத்திற்கான
அடிக்கல்லை
நாட்டினார். இவ்வாலயம் அமைக்கும்பணி ஷராக்
என்பவரால்
தொடரப்பட்டது. கி.பி. 1887இல் இவ்வாலயம் கட்டி
முடிக்கப்பட்டது. சிவப்புச் செங்கல்லினாலான இவ்வாலயத்தின்
அமைப்பு தனிச்சிறப்பு மிக்கதாக உள்ளது. இவ்வாலயத்தில்
|