காணப்படும் வண்ணம் தீட்டப்பட்ட கண்ணாடி ஜன்னல்கள்,
கலைச் சிறப்புமிக்கவை.
ஹக்ஸ்டபிள் கி.பி. 1854இல் சாயர்புரத்தில் நிறுவிய
மருத்துவ நிலையம் தமிழ்நாட்டில் ஆங்கிலத் திருச்சபையினர்
நிறுவிய முதல் மருத்துவமனையாயிற்று.
சாயர்புரத்தில் இன்றுள்ள போப் உயர்நிலைப்பள்ளிப்
பகுதியில் அந்நாளில் போப் தங்கியிருந்தார் எனப்படுகிறது.
போப்பின் நினைவாக இங்குள்ள போப் கல்லூரி 1963இல்
தோற்றுவிக்கப்பட்டது.
சாயர்புரத்திலும்
அதனைச் சுற்றிலுமுள்ள இடங்களிலும்
கடைக் கற்காலக் கருவிகள் காணப்பட்டுள்ளன. அறிஞர்
புரூஸ்புட் என்பவர் கி.பி. 1916இல் சாயர்புரம் தேரியிலிருந்து
கடைக் கற்காலக் கருவிகள் பலவற்றைக் கண்டார்.
இந்தியாவில்
மேற்குவங்காளத்திலுள்ள ஓர் இடத்தைத் தவிர
வேறு எங்கும்
இத்தகையத் தொன்மைவாய்ந்த கற்கருவிகள்
காணப்படவில்லை
எனப்படுகிறது.
தூத்துக்குடியிலிருந்து 40 கி.மீ. தொலைவில்
வேம்பார் என்ற
இடம் உள்ளது. கி.பி. 16ஆம் நூற்றாண்டில் வேம்பார்
போர்ச்சுக்கீசியரின் ஒரு வாணிபத்தலமாக
இருந்தது. பின்னர்
இங்கு டச்சுக்காரர்களும் வாணிபத்தலம் அமைத்தனர்.
புனித
ஆவி ஆலயம், புனித தாமஸ் ஆலயம் ஆகிய இரண்டும்
இங்குள்ள கத்தோலிக்கக் கிறித்தவ ஆலயங்களாகும்.
|