தலம் உள்ளது. இங்கு ஆதிநாத சுவாமி கோவில் உள்ளது.
இது ஒரு தொன்மைமிக்க கோவிலாகும். கி.பி. 8-9ஆம்
நூற்றாண்டில் வாழ்ந்த வைணவப் பெரியார் நம்மாழ்வார் தோன்றிய
இடம் இதுவே. நம்மாழ்வாருக்குப்பின் இவ்வூர் ‘ஆழ்வார்
திருநகரி’ என்ற பெயரைப் பெற்றது.
இங்குள்ள கோவிலின் வசந்த மண்டபத்திலுள்ள
இசைத்தூண்கள் சிறப்புமிக்கவையாகும். கோவிலின் ஒரு
பகுதியில் இராமாயணக் காட்சிகள் அழகிய ஓவியங்களாகத்
தீட்டப்பட்டுள்ளன. இக்கோவிலில் கருங்கல்லினாலாகிய
நாகசுரம் உள்ளது.
கொற்கை
திருச்செந்தூரிலிருந்து
தூத்துக்குடி செல்லும் சாலையில்
முக்காணி வழயாக உமரிக்காடு சென்று அங்கிருந்து 2 கி.மீ.
தொலைவு சென்றால் கொற்கை என்ற சிற்றூரைக் காணலாம்.
இன்றைய கொற்கை கடலிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில்
உள்ளது. ஆனால், சங்க இலக்கியத்தில் இக்கொற்கை
பாண்டிய
மன்னர்களின் துறைமுகத் தலைநகராகச் சிறந்து விளங்கியது.
முத்து வாணிகத்தில் கொற்கை புகழ் பெற்றிருந்தது.
முத்துக்குளித்தலும். சங்கு விற்றலும் இங்கு முக்கிய தொழில்களாக
இருந்தன. சங்க இலக்கியங்கள் கொற்கையின் பெருமையைக்
கூறுகின்றன. பிற்காலத்தில் அதிவீரராம பாண்டியனின்
(1563-1605) தலைநகராகக் கொற்கை விளங்கியது. தாமிரவருணி
கடலோடு கலக்குமிடம் அருகில் இந்நகர் சீருடன் திகழ்ந்தது.
ஆனால், கி.பி. சுமார் 12ஆம் நூற்றாண்டில் இந்நகர் தனது
சிறப்பை இழந்தது. இன்று ஒரு சிற்றூராகக் காட்சியளிக்கிறது.
கொற்கையில் இன்று
நாம் காணும் ‘பண்டைய சின்னம்’
‘ஈஸ்வரமுடையார் விநாயகர் கோவில்’ ஆகும். ஈஸ்வரமுடையார்
என்ற சிவனுக்குரிய கோவில் பிற்காலத்தில் விநாயகர் கோவிலாக
மாறியது என்று கூறப்படுகிறது. இக்கோவில் தொன்மைமிக்கது.
பாண்டிய மன்னர்கள் காலத்தில் இது கட்டப்பட்டதாகக்
கூறப்படுகிறது. கல்வெட்டுகள் பல
|