பக்கம் எண் :

364தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

வைகுண்ட ஏகாதசி இங்கு நடைபெறும் முக்கிய விழாவாகும்.

கி.பி 17ஆம் நூற்றாண்டில் சிறந்து விளங்கிய குமர குருபர
சுவாமிகள்
தோன்றிய இடம் ஸ்ரீவைகுண்டம் ஆகும். மதுரை
திருமலை மன்னரின் அன்பை இவர் பெற்றிருந்தார். இவர்
இயற்றிய நூல்களுள் குறிப்பிடத்தக்க ஒன்று ‘மீனாட்சியம்மை
பிள்ளைத்தமிழ்’ ஆகும்.

ஆதிச்சநல்லூர்

ஸ்ரீவைகுண்டத்திற்கு அருகில் ஆதிச்சநல்லூர் உள்ளது.
தமிழ்நாட்டின் பண்டைய பண்பாட்டைப்பற்றி அறிய உதவும்
பழம்பொருள்கள் இவ்வூர் அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சாகர்
என்ற ஜெர்மானிய அறிஞரால் கி.பி. 1876இல் இங்குப்
பல பழம்பொருள்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. இங்கு அகழ்ந்து
கிடைத்த தாழிகள், சென்னை அருகிலுள்ள பல்லாவரத்தில்
கிடைத்த தாழிகளை ஒத்துள்ளன என்றும், இப்பகுதியில் வாழ்ந்த
மக்கள் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பெருங்கல்
நாகரிகத்தின் தொடர்புடையவர்கள் என்றும் கூறப்படுகிறது.

தாமிரவருணியின் தென்கரையில் அமைந்துள்ள
ஆதிச்சநல்லூர் அருகிலுள்ள கொங்கராயக்குறிச்சி என்ற ஊரின்
இடுகாடே ஆதிச்சநல்லூர் மண்மேடு என்பர். இந்த இடுகாடு
மிகப்பரந்த அளவினைக் கொண்டுள்ளது. இப்பகுதியில் அறிஞர்
இராபர்ட் புரூஸ்புட் கண்டுபிடிப்புகள் நடத்தியுள்ளார். இரும்பு
ஆயுதங்கள், வெண்கலக் கோப்பைகள், அணிகலன்கள்,
விளக்குகள், அடுப்புகள், எலும்புக்கூடுகள் முதலியவை
இப்பகுதியில் அகழ்ந்து காணப்பட்ட இதர பழம்பொருள்களாகும்.
மண்டை ஓடுகள் மானிடஇயல் வல்லுநர்களால் பெரிதும் ஆய்வு
செய்யப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் நாகரிகத் தொன்மையை
எடுத்துக்காட்டிய இடங்களில் முக்கியமான ஒன்று ஆதிச்சநல்லூர்
ஆகும்.

ஆழ்வார்திருநகரி : ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 5 கி.மீ.
தொலைவில் ஆழ்வார் திருநகரி என்று ஒரு சிறந்த வைணவத்