கட்டடக்கலைச் சிறப்புமிக்கதாகும். சண்முக
விலாசம் 124
கற்றூண்களுடன் விளங்குதிறது.
5. 40 மீட்டர் உயரமுள்ள இக்கோவிலின் கோபுரம் ஒரு
கலைக் கருவூலமாகும்.
கந்தசஷ்டி விழா, வைகாசி விசாக விழா ஆகியவை
இங்கு
நடைபெறும் முக்கிய விழாக்களாகும்.
திருச்செந்தூர் முருகன் கோவில்
தமிழ் மக்கள் பண்பாட்டின்
பெருமைக்குரிய முக்கிய சின்னங்களில் ஒன்றாகும்.
ஸ்ரீவைகுண்டம்
திருநெல்வேலியிலிருந்து,
திருநெல்வெலி-திருச்செந்தூர்
சாலையில் 26 கி.மீ. தொலைவில் ஸ்ரீவைகுண்டம் உள்ளது. இது
ஒரு புகழ்மிக்க வைணவத்தலம் ஆகும். இத்தலம் நம்மாழ்வாரின்
பாடல் பெற்றுள்ளது. திருவேங்கடமுடையான் ஆலயம் என
இது அழைக்கப்படுகிறது. இங்குள்ள திருமால் வைகுந்தநாதன்,
கருவறையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். தாயார்,
வைகுந்தவல்லி எனப்படுகிறார்.
ஸ்ரீவைகுண்டம் ஆலயத்தில் பல அழகிய சிற்பங்கள் உள்ளன.
சந்நிதி வாயிலிலுள்ள மண்டபத்தில் பெரிய யாளிகளின்
உருவங்களைக்கொண்ட கற்றூண்கள் உள்ளன. இதனருகிலுள்ள
மண்டபத்தின் முன்வரிசைத் தூண்களில் பின்வரும்
பெயர்கள்
கொண்ட அழகிய சிற்பங்கள் உள்ளன.
தூண் 1. வேடுவன்.
தூண் 2. அனுமன், லட்சுமணர்,
அங்கதன்.
தூண் 3. ஸ்ரீராமர்,
சீதை, சுக்ரீவன்.
தூண் 4. அக்கினி,
வீரபத்திரர்.
ஒற்றைக் கல்லினாலான
இத்தூண்கள் அரிய கலைப்
படைப்புகளாகும்.
|