கருவறையில் முருகன் சுப்பிரமணியராக நின்ற கோலத்தில்
கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார். இடப்புறம் சிவலிங்கம்
உள்ளது. இச்சந்நிதிக்கு அருகில் சண்முகரின் சந்நிதி உள்ளது.
இது தெற்கு நோக்கி உள்ளது. சண்முகருடன் வள்ளியும்
தெய்வயானையும் காட்சி தருகின்றனர். உட்பிரகாரத்தில்
வள்ளிக்கும், தெய்வயானைக்கும் தனியாகச் சந்நிதிகள்
உள்ளன.
வடக்குப் பிரகாரத்தில் விஷ்ணுவின் சந்நிதி ஒன்று உள்ளது.
இங்கு நின்ற கோலத்தில் வெங்கடேசப்
பெருமாள் காட்சி
தருகிறார். இருந்த கோலத்தில் கஜலெட்சுமி காணப்படுகிறார்.
கிடந்த கோலத்தில் அரங்கநாதர், ஸ்ரீதேவி, பூதேவி, நீலாதேவி
ஆகிய முன்று தேவியருடன் காட்சியளிக்கிறார். இது ஒரு
குகைக் கோவிலாகக் காட்சியளிக்கிறது.
திருச்செந்தூர் கோவிலிலுள்ள சண்முகரின்
திருவுருவச்சிலையைக் கி.பி. 1648இல் டச்சுக்காரர்கள்
கொண்டு
சென்றதாகவும், பின் வடமலையப்ப பிள்ளை என்பவர் முயற்சியால்
இது திரும்பப் பெறப்பட்டு வழிபாட்டிற்கு வைக்கப்பட்டதாகவும்
கூறப்படுகிறது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் வீரபாண்டிய
கட்டபொம்மன் வழிபட்டதாகக் கருதப்படும் சிறிய செப்புத்
திருமேனிகள் சில உள்ளன.
கலைச்சிறப்பு
1. கோவிலின் வாயிலருகிலுள்ள
சுப்பிரமணியர்,
சண்முகர், நடராசர், கணபதி ஆகியோரின் திருவுருவங்கள்
ஒற்றைக் கல்லினாலானவை; வேலைப்பாடுமிக்கவை.
2. வள்ளி அம்மன் சந்நிதி, தெய்வானை அம்மன்
சந்நிதி ஆகியவற்றின் சுவர்கள் அழகிய சிற்ப
வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளன.
3. விஷ்ணு சந்நிதி
ஓர் அழகிய கலைப்படைப்பாகும்.
4, இக்கோவிலின்
மூன்று பிரகாரங்களிலும் அதிட்டான
மேடைமீது கருங்கல்லாலான தூண்கள் நிறுவப்பட்டிருப்பது
|