பக்கம் எண் :

38தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

பொழுது தமிழ்நாட்டின் முக்கியத் தலைவராக இராஜாஜி (1878-1972)
விளங்கினார். கி.பி. 1930இல் வேதாரண்ய உப்புச் சத்தியாக்கிரகம்
இவர் தலைமையில் நடைபெற்றது. 1935ஆம் ஆண்டு இந்திய
அரசுச் சட்டத்தின்படி மாநிலங்களில் தேர்தல்
நடத்தப்பட்டபொழுது சென்னை மாநிலத்தில் காங்கிரஸ்
வெற்றிபெற்று இராஜாஜி தலைமையில் அமைச்சரவை
அமைக்கப்பட்டது. மௌண்ட்பேட்டன் பிரபுவிற்குப் பின்
சுதந்தர இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகவும் இராஜாஜி
பணியாற்றினார். சென்னை மாநில முதலமைச்சராக இவர் 1952
முதல் 1954 வரை பணியாற்றினார். இவர் ‘சுதந்தரக் கட்சி’யைத்
தோற்றுவித்தார். ‘மூதறிஞர்’ என்ற பெயரைப் பெற்றார்.
இராஜாஜியின் நினைவாகக் கிண்டியில் 1975ஆம் ஆண்டு
ஒரு நினைவாலயம் அமைக்கப்பட்டது. இராஜாஜியின்
வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகளைக்காட்டும்
படங்களும் ஓவியங்களும் இம்மண்டபத்தில் இடம் பெற்றுள்ளன.

இராஜாஜி மண்டபத்திற்கு அருகில் காமராஜர் நினைவு
மண்டபம்
உள்ளது. இந்தியச் சுதந்தரப் போராட்டக் காலத்தில்
தமிழ்நாட்டின் முக்கியத் தலைவராகக் காமராஜர் (1905-1975)
விளங்கினார். இந்தியக் குடியரசில் கி.பி. 1952முதல் 1967வரை
காங்கிரஸ் கட்சியினர் சென்னை மாநிலத்தில் அமைச்சரவை
அமைத்தனர். 1954முதல் 1963வரை காமராஜர் சென்னை
மாநில முதலமைச்சராகப் பணியாற்றினார். தமிழக மக்களின்
நலனுக்காகப் பெரிதும் பாடுபட்ட இவர் ‘கர்ம வீரர்’ என்ற
பெயரைப் பெற்றார். ‘கர்ம வீரர்’ காமராஜரின் நினைவாலயம்
கிண்டியில் 1976ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

அரசுக் காட்சிக் கூடம்

எழும்பூர்ப் பகுதியில் தமிழக அரசின் காட்சிக்கூடம்
(Museum) உள்ளது. இந்தியாவிலுள்ள மிகப்பெரிய, பழமையான
காட்சிக் கூடங்களில் சென்னை காட்சிக்கூடம் முக்கிய ஒன்றாகும்.
இது 1851ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதன் முதல்
காப்பாளராக (Curator) பல்போர் (Balfour) என்ற