பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்37

சென்னை அடையாற்றிலுள்ள உலக பிரம்மஞான சபையின்
பெரிய மன்றத்தின் சுவரில் “உண்மையைவிடச் சிறந்த சமயம்
உலகில் வேறு இல்லை”
என்று எழுதப்பட்டுள்ளது. உலகிலுள்ள
முக்கிய சமயத்தினரின் சிறு ஆலயங்கள் இம்மன்றத்தின் அருகில்
உள்ளன. பெரிய மன்றத்திலிருந்து சிறிது தொலைவில் நூலகம்
உள்ளது. இதை ஆல்காட் கி.பி. 1886இல் தோற்றுவித்தார்.
பன்னாட்டு மொழிகளிலும் இங்கு நூல்கள் உள்ளன.
ஆய்வுக்குரிய நூல்களும், ஓலைச் சுவடிகளும் இங்கு உள்ளன.
இது தமிழ்நாட்டிலுள்ள சிறப்புமிக்க ஒரு நூலகம் ஆகும்.
காட்சிக்கூடம்
(Museum) ஒன்றும் இங்கு உள்ளது. நூலகம்
அருகில் உலகின் மிகப் பெரிய ஆலமரங்களில் ஒன்று உள்ளது.

கிண்டி நினைவு மண்டபங்கள்

கிண்டி சென்னை நகரின் ஒரு முக்கியப் பகுதியாகும்.
தமிழ்நாடு மாநில ஆளுநரின் மாளிகை இங்கு உள்ளது.
பேரறிஞர் அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகம்
இங்கு அமைந்துள்ளது. சிறுவர் பூங்கா, மான்கள் சரணாலயம்,
பாம்புப் பூங்கா ஆகிய சுற்றுலாப் பகுதிகளும் இங்கு உள்ளன.
இந்தியத் தலைவர்கள் மூவரின் நினைவு மண்டபங்கள் இங்கு
அமைந்துள்ளன.

காந்தி நினைவு மண்டபம்

இந்தியச் சுதந்தரப் போராட்டத்தை முன்னின்று நடத்தி,
ஆயுதமின்றி, அஹிம்சை முறையில் உலகோர் வியக்கும் வண்ணம்
நமக்குச் சுதந்தரம் பெற்றுத் தந்தவர் ‘நமது நாட்டின் தந்தை’
மகாத்மா காந்தி
(1869-1948) ஆவார். மகாத்மா காந்தியின்
நினைவாக ஒரு நினைவு மண்டபம் கி.பி. 1958இல் கிண்டியில் எழுப்பப்பட்
டது. இந்துக் கோவில் கலையம்சத்தை கொண்ட
தூண்கள் இம்மண்டபத்தில் ஒரு சிறப்பு அம்சம் ஆகும்.
இம்மண்டபத்தில் 1974ஆம் ஆண்டு ஒரு வட்ட அரங்கம்
அமைக்கப்பட்டது.

காந்தி நினைவு மண்டபத்திற்கு அருகில் இராஜாஜியின்
நினைவு மண்டபம்
உள்ளது. இந்தியச் சுதந்தரப் போராட்டத்தின்