பக்கம் எண் :

388தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

இவ்வாலயத்தில் உள்ளன. பிரகாரங்களில் காணப்படும்
தூண்களில் தீபலட்சுமிகள் உள்ளனர். இவ்வாலயத்தில்
வழிபாடு கேரள முறைப்படி நடைபெறுகிறது.

பகவதி அம்மன் பாணாசுரனை வீழ்த்தியதாகக்
கருதப்பட்டு நடைபெறும் ‘பரிவேட்டை’ இங்கு நடைபெறும்
ஒரு முக்கிய விழாவாகும்.

காந்தி நினைவு மண்டபம்

கன்னியாகுமரியின் தென்கோடி முனையில், கடலுக்கு
அருகில் காந்தி நினைவு மண்டபம் உள்ளது. நமது இந்திய
நாட்டின் தந்தை
யான மகாத்மா காந்தி (1869-1948) 1948
ஜனவரி 30இல் காலமானார். காந்தி அடிகளின் இறுதிச்
சாம்பல் 1948 பிப்ரவரி 12ஆம் நாள் கன்னியாகுமரிக் கடலில
கரைக்கப்பட்டது. காந்தியடிகளின் இறுதிச் சாம்பல் கன்னியா
குமரிக்கடலில் கரைக்கப்படுவதற்கு முன், தரைமீது
வைக்கப்படடிருந்த இடத்தில், அவர் நினைவாக ஒரு
மண்டபம் எழுப்பப்பட்டது. 1954இல் இதன் கட்டட வேலை
தொடங்கப்பட்டு 1956இல் முடிக்கப்பட்டது. இம்மண்டபத்தின்
மத்தியிலுள்ள அழகிய அறையில் மகாத்மாவின் இறுதிச் சாம்பல்
கடலில் கரைக்கப்படுமுன் வைக்கப்பட்ட இடத்தில் ஒரு சிறு பீடம்
உள்ளது. இப்பீடத்தின்மீது, ஒவ்வொரு வருடமும் அக்டோபர்
2ஆம் நாள்
(காந்தி பிறந்த நாள்) சூரியனின் நண்பகல்(12 மணி)
கதிர்கள் விழும்படியாகக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது ஒரு
சிறப்பாகும்.

கன்னியாகுமரியிலுள்ள காந்தி மண்டபம், காந்தியடிகளின்
நினைவைக் கூறும் வகையில் ஒரு சிறந்த தேசியச்
சின்னமாக
உள்ளது.

விவேகானந்தர் நினைவு மண்டபம்

சுவாமி விவேகானந்தர் (1863-1902) இந்து சமயத்தில்
ஆழ்ந்த பற்றுக்கொண்டு விளங்கிய ஒரு மகான் ஆவார்.
சிறந்த தத்துவ ஞானியாகவும், நாட்டுப்பற்று மிக்கவராகவும்
விளங்கியவர். கி.பி. 1893, செப்டம்பரில் அமெரிக்க ஐக்கிய
நாட்டிலுள்ள சிக்காகோவில் நடைபெற்ற உலக சமயங்கள்
மாநாட்டில்