கலந்துகொண்டு, அங்கு இந்து சமயத்தின் மேன்மையான
கருத்துகளை மேனாட்டவர் நன்கறியும்படி செய்தார், இந்து
சமயம் “உலக சமயங்களின் தாய்” என்று கூறி இந்து
சமயத்திற்குப் பெருமை தேடித் தந்தார்.
இராமகிருஷ்ண பரமஹம்சரின் (1836-1886) சீடராக விளங்கிய
சுவாமி விவேகானந்தர் (நரேந்திரநாத் தத்தா) தம் குருவின்
நினைவாக 1896இல் இராமகிருஷ்ணா மடத்தை நிறுவினார்.
தோற்றுவிக்கப்பட்ட காலம்முதல் இன்றுவரை
இந்த நிறுவனம்
மனித சமூகத்திற்குப் பல நற்பணிகளைப் புரிந்து வருகிறது.
நாட்டுப்பற்றுள்ள
நல்லாராகவும், இந்தியப் பண்பாட்டின்
பெருமையை உலகறியச் செய்த மகானாகவும், மனித குலத்திற்கு
அறிவொளி பரப்பிய ஞானியாகவும், மனத்திடம் கொண்டு
துயரங்கள் நீங்கி உலகில் வாழ்ந்திட வழி காட்டிய உத்தமராகவும்
விளங்கிய சுவாமி விவேகானந்தருக்குக் கன்னியாகுமரியில் ஒரு
நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
விவேகானந்தர் நினைவு
மண்டபம் கடற்கரையில்
இல்லாமல் கடலுக்குள் அமைந்துள்ள பாறையில் அமைந்திருப்பதன்
காரணம் இதுதான் : 1893இல் உலக சமயங்கள் மாநாட்டில்
கலந்துகொள்ளச் செல்லுமுன் சுவாமி விவேகானந்தர் 1892,
டிசம்பர் இறுதியில் கன்னியாகுமரிக்கு வந்தார். ஸ்ரீபாத மண்டபம்
உள்ள பெரிய பாறை கடற்கரையிலிருந்து சுமார் 490 மீட்டர்
தொலைவில் உள்ளது. சுவாமி விவேகானந்தர் இப்பாறைக்கு நீந்திச்
சென்று, அங்கு 3 நாள் தியானத்தில் அமர்ந்தார். (டிசம்பர் 25, 26,
27 ஆக இருக்கலாம்) இத்தியானத்தில் இவருக்கு அறிவொளி
கிடைத்தது. தமது தியானத்தில் உருவான திட்டத்தை
நிறைவேற்றுவதைத் தமது முக்கிய பணியாகக் கொண்டார்.
சுவாமி விவேகானந்தர் நினைவுகொள்ள, அவர் அறிவொளி
பெற்ற பாறையில் ஒரு நினைவுச்சின்னம் அமைக்கும்
திட்டம்
|