1962இல் உருவானது. விவேகானந்தர் பாறை நினைவுக் குழு
ஒன்று அமைக்கப்பட்டது. பாறையில் நினைவு மண்டபம்
அமைக்கச்
சென்னை அரசின் இசைவு 1964இல் கிடைத்தது. சுவாமி
விவேகானந்தர் நாடு போற்றும் நல்லவராதலால், இந்தியாவின்
பல்வேறு பகுதிகளிலிருந்தும், இப்பாறை நினைவு மண்டபம்
அமைக்க நன்கொடை குவிந்தது. நினைவு மண்டபம் அமைக்கும்
பணிக்கு வேண்டிய உடலுழைப்பு யாவற்றையும் தானமாகத் தமிழக
அரசு கொடுத்தது. சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில்
மண்டபம் அமைக்கும் பணி நிறைவேற்றப்பட்டு, 1970,
செப்டெம்பர் 2ஆம் நாள் இம்மண்டபம் திறக்கப்பட்டது.
விவேகானந்தர் நினைவு மண்டபம், கடற்கரையிலிருந்து
490 மீட்டர் தொலைவில் கடலுக்குள் அமைந்துள்ள பெரிய
பாறையின்மீது அமைக்கப்பட்டுள்ளது. (விசைப்படகில் இங்கு
செல்கிறார்கள்.) இம்மண்டபம் முற்றிலும் கருங்கல்லால்
கட்டப்பட்டுள்ளது. நினைவு மண்டபத்தில் ஸ்ரீபாத மண்டபம்,
சபா மண்டபம், தியான மண்டபம் என்று மூன்று பகுதிகள்
உள்ளன.
ஸ்ரீபாத மண்டபம் அமைந்துள்ள பாறைப் பகுதியில்தான்
ஒற்றைக் காலில் இங்கு நின்று தவம் செய்த குமரி அம்மனின்
பாதம் உள்ளதாகக் கருதப்படுகிறது. இப்பாறையில்தான் சுவாமி
விவேகானந்தரும் தியானத்தில் அமர்ந்து ஞானம்
பெற்றார்
எனப்படுகிறது.
சபா மண்டபத்தில் சுவாமி விவேகானந்தரின் நினைவுச்
சிலை உள்ளது. இம்மண்டபம் இந்துக் கோவிற் கலையம்சங்களைக்
கொண்ட 12 கருங்கல் தூண்களையும், பேலூர் இராமகிருஷ்ண
ஆலயத்தின் விமான அமைப்பின் அம்சத்தையும்
கொண்டுள்ளது.
கருங்கல்லின் பளபளப்பு நம்மை வியக்கச் செய்கிறது.
இம்மண்டபத்தின் கிழக்கில் ஸ்ரீபாத பாறையை நோக்கியவாறு
சுவாமி விவேகானந்தரின் சிலை நிறுவப்பட்டுள்ளது.
சுமார் 1.4 மீட்டர் உயரமுள்ள கருங்கல் பீடத்தின் மீது
2.4 மீட்டர் உயரமுள்ள சுவாமி விவேகானந்தர் வெண்கலச்
சிலை நின்ற கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இச்சிலை
|