பக்கம் எண் :

82தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

5. ஆர்க்காடு

வடஆர்க்காடு மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க
இடம் ஆர்க்காடு ஆகும். வேலூரிலிருந்து 24 கி.மீ. தொலைவில்
ஆர்க்காடு உள்ளது. இவ்வூர் பாலாற்றின் கரையில் அமைந்து
உள்ளது. கி.பி.18ஆம் நூற்றாண்டில் ஆர்க்காடு மிக்க சிறப்புப
பெற்றிருந்தது. மொகலாய மன்னர் ஒளரங்கசீப் காலத்தில்
சுல்பிகர் கான்
என்ற தளபதியால் கர்நாடகத்தின் ஒரு
பகுதி வெல்லப்பட்டது. மொகலாயத் தளபதிக்குச் செஞ்சி
முதலில் தலைமையிடமாக இருந்தது. தாவுத்கான் காலத்தில்
ஆர்க்காடு பெரிதும் உருவாகிச் சிறப்பெய்தியது. சாதத் உல்லா
கான்,
முதல் ஆர்க்காட்டு நவாபாகக் கருதப்படுகிறார். இவர்
தமது தலைமையிடத்தைக் கி.பி. 1712இல் ஆர்க்காட்டிற்கு
மாற்றினார். இவருக்குப் பின் தோஸ்த் அலி, அன்வாருதீன்
ஆகியோர் ஆர்க்காட்டு நவாபுகளாக ஆட்சி புரிந்தனர்.
ஆங்கிலேயரின் உதவியால் கர்நாடக நவாபாகிய முகமதலி
கான்
தமது தலைமையிடத்தை சென்னையில்
வைத்துக்கொண்டார். சென்னை சேப்பாக்கத்தில் இவரது
அரண்மனை இருந்தது. நவாப் முகமதலி தாம் ஆங்கிலேயரிடம்
பட்ட கடனுக்காகக் கர்நாடகத்தில் வரி வசூலிக்கும் உரிமையை
ஆங்கிலேயருக்குக் கொடுத்து விடுகிறார். பின் கி.பி. 1801இல்
ஆங்கில கவர்னர் ஜெனரல் வெல்லெஸ்லி பிரபு கர்நாடகம்
முழுவதையும் இந்தியாவிலுள்ள கிழக்கிந்தியக் கம்பெனி
அரசுடன் இணைத்துவிட்டார். இதனால் ஆர்க்காட்டு நவாப்
அஜிம் உத்தௌலா ‘நாடு இல்லாத நவாப்’
ஆனார்.
கி.பி. 1855இல் நவாப் குலாம் கௌஸ்கான் இறந்தபின் ஆங்கில
கவர்னர் ஜெனரல் டல்லௌசி பிரபு ‘ஆர்க்காட்டு நவாப்’
பதவியையும் நீக்கிவிட்டார். அஜிஷாம் என்பவர் 1855இல்
ஆர்க்காட்டின்