பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்83

முதல் இளவரசரானார். ஆர்க்காட்டு இளவரசராகத் தற்பொழுது
உள்ளவர் குலாம் முகமது அப்துல் காதர் ஆவார். இவர்
சென்னையில் ‘அமீர் மஹாலில்’ வாழ்ந்து வருகிறார்.

ஆர்க்காட்டிலுள்ள பண்பாட்டுச் சின்னங்கள்

டில்லி வாயில்

கர்நாடக நவாபுகளின் தலைநகராக விளங்கிய ஆர்க்காட்டில
வலிமைமிக்க கோட்டை இருந்தது. ஆர்க்காட்டுக் கோட்டையை
முதலில் திம்மி ரெட்டி என்பவர் கட்டியிருக்கலாம் என்று
கூறப்படுகிறது. மொகலாய ஆட்சிக்குட்பட்ட கர்நாடக நவாப்
தாவுத்கான்
இக்கோட்டையை மீண்டும் கட்டியிருக்கலாம்
அல்லது பலப்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கி.பி. 18ஆம் நூற்றாண்டில் ஆர்க்காட்டில் சுமார் 8 கி.மீ.
சுற்றளவுள்ள கோட்டையும் அதில் ஐந்து வாயில்களும்
(gates) இருந்தனவாம். அவற்றுள் முக்கியமான வாயில்தான்
பாலாற்றங்கரையிலுள்ள ‘டில்லி வாயில்’ ஆகும். ஆர்க்காடு
நகரிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் இவ்வாயில் உள்ளது.
ஆர்க்காடு வரலாற்றின் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி கி.பி. 1751இல்
நடந்த ‘ஆர்க்காட்டு முற்றுகை’ ஆகும். இம்முற்றுகை
இரண்டாவது கர்நாடகப் போர் நடந்தபொழுது ஏற்பட்டது.
சந்தாசாகிப்
என்பவர் ஆர்க்காட்டின் நவாபாக வர விரும்பினார்.
இவர் பிரெஞ்சுக்காரர்கள் உதவியுடன் ஆர்க்காட்டின் நவாபாகப்
பதவியிலிருந்த அன்வாருதீனை (1746-1749) ஆம்பூர் போரில்
தோற்கடித்தார். போரில் அன்வாருதீன் கொல்லப்பட்டார்.
அன்வாருதீனின் மகன் முகமதலி தமது பாதுகாப்பிற்காகத்
திருச்சிக் கோட்டையினுள் புகுந்தார். ஆர்க்காட்டின் புதிய
நவாபான சந்தாசாகிப் திருச்சிக் கோட்டையை முற்றுகையிட்டார்.
இத்தருணத்தில் முகமதலி ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின்
படையில் பணியாற்றிய இராபர்ட் கிளைவ் தலைமையில் ஒரு
படை ஆர்க்காட்டிற்குச் சென்று அதைப் பிடித்தது. தலைநகர
பிடிக்கப்பட்டதை அறிந்த சந்தாசாகிப், திருச்சியிலிருந்து ஒரு
படையைத் தம் மகன் இராஜா சாகிப் தலைமையில்
ஆர்க்காட்டை விடுவிக்க