| அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்? கொண்ட கொழுநன் குடி வறுமையுற்றதாகவும், தன்னைப் பெற்ற தன் தந்தை வீட்டு உணவை நினையாது இப்போது ஒரு பொழுதுவிட்டு ஒரு பொழுது உண்கிறாள். என்னே அவள் பாண்பாடு ! என்று வியக்கின்றாள்.35 ஒரு பெண்ணிடம் அன்று காணப்பட்டதாகப் புலவர்கள் கற்பிக்கும் நற்குணம் அக் காலத்து மகளிரின் சிறந்த பண்பாடுகளை எடுத்துக்காட்டுகின்றது. பெண்கள் பூப்புற்றிருக்கும் நாள்களில் வீட்டுப்பாண்டங்களைத் தொடாமல் ஒதுங்கியே இருப்பார்கள். இவர்கள் ‘கலந்தொடா மகளிர்’ எனப்படுவர். இல்லறத்தில் நின்று இல்வாழ்க்கையின் கடமைகளையாற்றும் உரிமை கணவனுடன் சேர்ந்து வாழும் பெண்களுக்குத்தாம் உண்டு. தன் கணவன் பொருளீட்டுவதற்காகவோ, அரசனுடைய கடமைகளை மேற்கொண்டோ தன்னைப் பிரிந்திருக்கும்போதும், அவன் பரத்தையுடன் கூடி வாழும்போதும் கற்புடைய பெண் ஒருத்தி, ‘அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஓம்பலும், துறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர் கோடலும்’ ஆகிய இல்லற உரிமைகளை இழந்து நிற்பாள்.36 அப்போதெல்லாம் அவள் தன்னை ஒப்பனை செய்துகொள்ளும் வழக்கமும் இல்லை. இல்லற வாழ்க்கைக்கு மிகவும் சிறப்பாக அமைவது நன்மக்கட் பேறு என்பது பண்டைய தமிழரின் கொள்கையாகும். மக்கட் செல்வத்தைப் பாராட்டும் நூல்கள் பல உண்டு. திருக்குறளில், ‘பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பேறல்ல பிற’37 என்று மக்கட்பேறு சிறப்பிக்கப் படுகின்றது. பலரோடு உண்ணும் பெருஞ்செல்வராக இருப்பினும் குறுகுறுவென நடந்து, உணவைச் சிறு கையால் பிசைந்து மேலும் கீழும் சிதறிப் பெற்றோர் அறிவை இன்பத்தால் மயக்கும் மக்களைப் பெறாதார்க்கு உலகில் பயன்படும் பொருள் ஒன்றும் இல்லை என்று புறப்பாட்டு ஒன்று38 மக்கட்பேற்று இன்பத்தைப் பரவுகின்றது. குழந்தையைப் பெறுவது தன் கடன் என்றும், அக் குழந்தைக்குக் கல்வி பயிற்றியும், அறிஞர்களின் அவையில் முன்னணியில் அவன் 35. நற்றி.110. 36. சிலப். 16 : 71-73 37. குறள், 61. 38. புறம். 188 |