பக்கம் எண் :

216தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

படையை முறியடித்த மன்னன், 2. பரவீரசித், 3. மழவரை வென்ற வீரதுங்கன்,
4. அதிவீரன், 5. சங்ககிருது, 6. நிருபகேசரி, 7. வாதாபிகொண்ட
பரதுர்க்கமர்த்தனன், 8. சமராபி ராமன்; அதிராசமங்கலப் போரில் சளுக்க
மன்னனைக் கொன்றவன், 9. பூதி விக்கிரமகேசரி. புதுக்கோட்டைக்கு
அண்மையிலுள்ள தேனிமலையில் 7ஆம் நூற்றாண்டினதெனக் கொள்ளப்படும்
கல்வெட்டு ஒன்றில் இருக்குவேள் ஒருவன் அங்கிருந்த சமணமடத்துக்குத்
தானம் செய்து கொடுத்த செய்தி ஒன்று கிடைக்கின்றது. அம் மன்னன்
இன்னான் எனத் தெரியவில்லை.

     பூதி விக்கிரமகேசரி வீரபாண்டியனுடன் போரிட்டு வெற்றி கண்டான்
என்றும், அவன் பல்லவர் படைகளைக் கொன்று காவிரியாற்றில் செந்நீர்
ஓடச்செய்தான் என்றும், வஞ்சிவேள் என்பானைக் கொன்றான் என்றும்
கொடும்பாளூர்க் கல்வெட்டு மேலும் கூறுகின்றது. அவனுக்குக் கற்றளி,
வரகுணா என்று இரு மனைவியர் உண்டு. தென்னவன் இளங்கோ வேளார்
என்னும் மறவன் பூதியார் என்பவன் மனைவி கற்றளிப்பிராட்டியார் என்று
ஒரு கல்வெட்டுக்17 கூறுகின்றது. தில்லைத்தானம் கல்வெட்டினின்று வரகுணப்
பெருமானார் என்பவர் பராந்தக இளங்கோ வேளாரின் அரசர் என்று
அறிகின்றோம். எனவே, பூதி விக்கிரமகேசரியானவன் பராந்தக சுந்தர
சோழனுக்குக் கீழ்ப்பட்ட ஒரு சிற்றரசன் என்று கொள்ளலாம். மற்றும் லால்
குடியில் கிடைத்துள்ள ஒரு கல்வெட்டுச்18 செய்தியானது நங்கை வரகுணப்
பெருமானார் சோழ மன்னனோடு உடன்பிறந்தவள் எனக் கூறுகின்றது.
தனக்குக் கற்றளியின் வயிற்றில் பிறந்த இரு ஆண் மக்களுக்கு விக்கிரமகேசரி
பராந்தகன் என்றும், ஆதித்தன் என்றும் பெயரிட்டான். கொடும்பாளூரைச்
சேர்ந்த பராந்தகச் சிறியவேளான் சோழரின் படைத் தலைவர்களுள் ஒருவன்;
சிங்களத்துப் படையெடுப்பில் தலைமை தாங்கியவன்.

     முதலாம் பராந்தகனுக்கும் கொடும்பாளூர் இருக்குவேளிர்களுக்கு
மிடையே நட்புறவு வளர்ந்திருந்தது. அக் காரணத்தாலேயே வீரபாண்டியனை
வெல்லுவதற்கு விக்கிரமகேசரி சோழ மன்னருக்கு உதவி செய்துள்ளான் என்று
அறிகின்றோம்.

     பூதி விக்கிரமகேசரி வென்று முடிகொண்ட வஞ்சிவேள் இன்னான் என
அறியமுடியவில்லை. காவிரிக்கரையில் இந்த விக்கிரமகேசரி பல்லவர்களை
எவ்வாறு போரிட்டு வென்றிருக்க முடியும் என்பதும் விளங்கவில்லை.
கொடும்பாளூர்க் கல்வெட்டின்

     17. Ep. Rep. 272/1903.
     18. Ep. Ind. XX p. 53