கட்டிய இக்கயிலாசநாதர் கோயிலிலே சுவர் ஓவியங்களையும் எழுதுவித்தான்.
நெடுங்காலம் மறைந்திருந்த இக்கோயிற் சுவர் ஓவியங்களை ழூவோ
தூப்ராய அவர்கள் 1931இல் கண்டுபிடித்து, அவற்றை வெளிப்படுத்தினார்கள்.
ஆனால், இங்குள்ள ஓவியங்கள் பெரிதும் சிதைந்து அழிந்துவிட்டன.
உருப்படியான ஓவியங்கள் இங்குக காணப்படவில்லை.
முகத்தின் ஒரு பகுதி
ஓர் இடத்திலும், இன்னோர் ஓவியத்தின் உடல் மட்டுமே ஓர் இடத்திலும்,
இன்னோர் ஓவியத்தின் கைமட்டும் இன்னோர் இடத்திலும், மற்றோர்
ஓவியத்தின் கண், காதுகள்
மட்டும் இன்னோர் இடத்திலும் இப்படிச் சிற்ப
உறுப்புகள் சிதைந்து சிதைந்து காணப்படுகின்றன.
சில, மங்கலான
வர்ணங்களுடன் காணப்படுகின்றன. சில வர்ணங்கள் முழுவதும் அழிந்து
கரிய கோடுகளையுடைய
புனையா ஓவியங்களாகக்1 காணப்படுகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோயில் ஓவியத்தைக்
கண்டபோது அவலச் சுவையும் உவகைச் சுவையும்
என் மனத்திலே
தோன்றின. இவ்வளவு அழகான ஓவியங்கள் ஒன்றேனும் உருத்தெரியாமல்
சின்னாபின்னப்பட்டுப்
போயினவே என்பது பற்றித் துன்ப உணர்ச்சியும்,
சிதைந்து போன சித்திரங்களையேனும் காணப்பெற்றேனே என்னும் உவகை
யுணர்ச்சியும் தோன்றின. இயல்பாகவே சித்திரங்களில் ஆர்வம் உள்ள
எனக்கு அழிந்துபோன இச்சித்திரங்களைக் கண்டபோது, எனது நெருங்கிய
உற்றார் உறவினர்
இறந்தபோது உண்டான உணர்ச்சியே உண்டாயிற்று.
இவற்றில் ஒரு காட்சி இன்னும் என் மனதைவிட்டு
அகலவில்லை. அது என்னவென்றால், முழுவதும்
1. Outline
Drawing.
|