102 |
தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் |
அழிந்துபோன ஓர் ஓவியத்தின் ஒரு சிறு பகுதியே. இந்த ஓவியத்தில் நான்
கண்டது ஒரு
வாலிபனுடைய
முகத்தின் ஒரு பாதிதான். நெற்றியின் ஒரு
பாதி, ஒரு கண், மூக்கின் ஒரு
பாதி, வாயின் ஒரு பாதி
ஆகிய இவை
மட்டும்தான் அதில் காணப்பட்டன. இதன் அளவு
ஏறக்குறைய இரண்டு
அங்குலம் இருக்கும்.
இதில் வர்ணங்கள் முழுவதும் அழிந்துபோய்,
கரிய நிறக்கோடுகள் மட்டுமே இவ்வோவியத்தின் கண்,
புருவம், மூக்கு,
வாய், காதுகளைப்
புனையா ஓவியமாகக் காட்டி நின்றன. இந்தச் சிறிய
ஓவியத்தை,
முகத்தின் ஒரு பாதியைத்
தற்செயலாகக் கண்ட எனக்கு ஏதோ
உணர்ச்சி தோன்றி, அங்கேயே நின்று
விட்டேன்.
அந்தக் கண்
என்னிடம்ஏதோ சொல்லுவது போலத் தோன்றிற்று. அதையே பார்த்துக்
கொண்டு நெடுநேரம் நின்றேன். அந்த ஓவியப் பகுதி என்மனத்தில் பதிந்து
இன்றும்
மனக்கண்ணில்
காணப்படுகிறது. அது அழியாமல் முழு ஓவியமாக
இருந்தால் எவ்வளவு
அழகாக இருக்கும்!
பனைமலை ஓவியம்
வடஆர்க்காடு மாவட்டம் விழுப்புரம் தாலுக்காவில் உள்ள பனைமலை
என்னும்
ஊரில் உள்ள
கோயில், கயிலாசநாதர் கோயிலைக் கட்டிய
இராஜசிம்ம பல்லவன்
கட்டியதாகும். இக்கோயிலிலும்
மிக அழகான,
ஆனால், சிதைந்துபோன ஓவியம் உண்டு.
இப்போது இவ்வோவியத்தில்
காணப்படுவது மகுடம்
அணிந்த ஒரு பெண்மணியின்
உருவம்.
இப்பெண்மணியின் முடிக்கு மேலே அழகான குடை இருக்கிறது. தூணின்
மேல் சாய்ந்து
நிற்கும் இப்பெண்மணியின் உருவத்தைப் பார்வதி தேவியின்
உருவம் என்று கூறுகின்றனர்.
ஆனால், இது ஓர் இராணியின்
உருவம்போலக் காணப்படுகிறது. இடையிடையே அழிந்து
போன இந்த
ஓவியம்,
இந்நிலையிலும் வெகு அழகாக இருக்கிறது. நன்னிலையில் இது
இன்னும் எவ்வளவு அழகாக இருந்திருக்கும்!
இந்த ஓவியத்தின்
பிரதியொன்று சென்னைப்
பொருட்காட்சி சாலையில் ஓவியப் பகுதியில்
இருக்கிறது.
|