பக்கம் எண் :

118
118

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


 

    ‘‘கீர்த்தனை தமிழ்நாட்டில் கால் வைத்ததும் அதற்கு வரவேற்பு
நல்கப்பட்டது. தமிழில் கீர்த்தனைகள் யாக்கப்பட்டன. அந்நாளில்
பெரும்பெருஞ் சிங்க ஏறுகள் இருந்தன. முத்துத்தாண்டவர்,
கோபாலகிருஷ்ண பாரதியார், அருணாசலக் கவிராயர் முதலியோர
பெருஞ்சிங்க ஏறுகளல்லவோ? அவர்களால் யாக்கப்பட்ட கீர்த்தனைகளில்
பொருளும் இசையும் செறியலாயின...... இந்நாளில் கலைஞரல்லாதாரும்
கீர்த்தனைகளை எளிதில்எழுதுகின்றனர். அவைகள் ஏழிசையால் அணி
செய்யப்படுகின்றன. அவ்வணியைத் 
தாங்க அவைகளால் இயலவில்லை. கலையற்ற கீர்த்தனைகளின் ஒலி, காதின் தோலில் சிறிது நேரம் நின்று,
அரங்கம் கலைந்ததும் சிதறி விடுகிறது. இதுவோ இசைப்பாட்டின்
முடிவு?

 

    ‘‘இசைப்பாட்டு இயற்கையில் எற்றுக்கு அமைந்தது? ..... புலன்களின்
வழியே புகுந்து, கோளுக்குரிய புறமனத்தை வீழ்த்தி, குணத்துக்குரிய
அகக்கண்ணைத் திறந்து, அமைதி இன்பத்தை நிலைபெறுத்துதற்கென்று
இசைப்பாட்டு இயற்கையில் அமைந்தது. இஃது இசைப்பாட்டின் உள்ளக்
கிடக்கை. இதற்கு மாறுபட்டது
இசைப்பாட்டாகாது.’’1

 

சில இசையாசிரியர்

 

     அண்மைக் காலத்தில் தமிழிலே கீர்த்தனைகளையும்
இசைப்பாடல்களையும் இயற்றி அழியாப் புகழ் பெற்ற சிலருடைய பெயரைக்
கூறுவோம்.

 

     அருணாசலக் கவிராயர், அநந்த பாரதிகள், கவிகுஞ்சர பாரதியார்,
கனம் கிருஷ்ணையர், இராமலிங்க அடிகள், கோபாலகிருஷ்ண பாரதியார்,
கோடீசுவர ஐயர், பட்டணம் சுப்பிரமணிய ஐயர், மாரிமுத்துப் பிள்ளை,
மாயவரம்


1. தமிழிசைச் சங்கத்தின் 3ஆம் ஆண்டு விழாத் திறப்பு மொழி.