பக்கம் எண் :

New Page 1

இசைக் கலை

117


 

(கி.பி.7ஆம் நூற்றாண்டின் மத்தியில்) தமிழ்நாட்டில் வழங்கிவந்த
இசைகளைப் பற்றிக கூறுகிறது.1
 

     வடமொழியிலே எழுதப்பட்டிருப்பதனாலே இந்தச் சாசனம் கூறும்
விஷயம் தமிழ்நாட்டு இசையன்று என்று கருதக்கூடாது. தமிழ் நாட்டில்
வழங்கிய இசையைத்தான் இந்தச் சாசனம் வடமொழியில் கூறுகிறது.
வடமொழியில் சங்கீத நூல்கள் எழுதப்பட்டிருப்பதனாலே அவை தமிழ்
நாட்டு இசையல்ல என்று கருதுவது தவறு. இப்போதுள்ள வடமொழிச் சங்கீத
நூல்களில் பலவும் தமிழ் நாட்டு இசையைத்தான் கூறுகின்றன.

 

சங்கீத ரத்நாகரம்

 

     கி.பி.1210 முதல் 1247 வரையில் வாழ்ந்திருந்தவரும், சங்கீத ரத்நாகரம்’
என்னும் இசைநாடக நூலை வடமொழியில் எழுதியவருமான நிசங்க சார்ங்க
தேவர் என்பவர், தமிழ்நாட்டிற்கு வந்து தமிழ் இசைகளை ஆராய்ந்து,
பின்னர் கி.பி.1237இல் அந்நூலை எழுதினார் என்பர். அந்நூலிலே தேவாரப்
பண்கள் சிலவும் காணப்படுகின்றன. தமிழ் இசைதான் பிற்காலத்திலே
கர்னாடக சங்கீதம் என்னும் பெயரால் வழங்கப்படுகிறது.

 

கீர்த்தனைகள்

 

     கீர்த்தனைகள் என்று கூறப்படுகிற இசைப்பாடல்கள் மிகப்
பிற்காலத்திலே தோன்றின. கீர்த்தனைகளைப் பற்றித் தமிழ்ப் பெரியார்
திரு.வி.க. அவர்கள் கூறுவது இது:

 

     ‘‘தமிழ்நாடு விருந்தோம்புவதில் பெயர் பெற்றது. எல்லாத் துறைகளிலும்
அது விருந்தோம்பியுள்ளது. தமிழ்நாடு கீர்த்தனை விருந்தையும் ஓம்பியது.
கீர்த்தனையால நாட்டுக்கு விளைந்த நலன் சிறிது; தீங்கோ பெரிது.


1. Epi. Indi. Voll. XXII-p 226-237.