பக்கம் எண் :

114
116

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


 

    இதனால் அறியப்படுவது என்னவென்றால், யாப்பருங்கலம் என்னும்
நூலுக்குப் புறனடையாக யாப்பருங்கலக் காரிகை எழுதப்பட்டதுபோல,
இசைத்தமிழ் நூல் என்னும் பெயருடனிருந்த ஒரு முதல் நூலுக்குப்
புறனடையாக இசைத்தமிழ்ச் செய்யுட்கோவை என்னும் இந்நூல்
எழுதப்பட்டது என்பது தெரிகிறது. இப்புறனடை நூலில் முதனூலில்
இருந்த பாட்டுகளை உணர்த்தும் செய்யுள்களும் இருந்தன என்பது
தெரிகிறது.

  

இசைக்கலைச் சாசனம்

  

         அரசர்களும் செல்வர்களும் இசைக்கலைஞர்களைப்
போற்றியதோடு, அவர்களில் சிலர் தாமே பெரிய இசைக்கலைஞராகவும்
இருந்தார்கள். அப்பர் சுவாமிகள் காலத்தில் இருந்த மகேந்திரவர்மன்
என்னும் பல்லவ அரசன் (கி.பி.600-630) சிறந்த இசைப்புலவனுமாக
இருந்தான். இவன் புத்தம் புதிதாக ஓர் இசையை அமைத்தான்.
ஆகையினாலே, இவனுக்குச் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. இவன்
காலத்திலே இசைக்கலையில் பேர்போன உருத்திராசாரியார் என்பவர்
ஒருவர் இருந்தார். உருத்திராசாரியார், மகேந்திரவர்மனுடைய இசைக்கலை
ஆசிரியர் என்று கருதப்படுகிறார்.

  

         இசைக்கலைஞனாகிய மகேந்திரவர்மன் இசைக்கலையைப் பற்றி
ஒரு சிறந்த சாசனத்தைக் கல்லில் எழுதிவைத்தான். அந்தச் சாசனத்திற்கு
இப்போது குடுமியாமலை சாசனம் என்று பெயர். புதுக்கோட்டையைச்
சேர்ந்த குளத்தூர் தாலுக்காவில் குடுமியாமலை என்னும் குன்றின்மேலே
சிகாநாத சுவாமி கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலுக்குப் பின்புறத்தில்

பெரும்பாறையில் இந்தச் சாசனம் எழுதப்பட்டிருக்கிறது. இந்தச் சாசனம்
வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர் என்னும் இரண்டு விநாயகர்
உருவங்களுக்கு மத்தியில் 13 x 14 அடி பரப்புள்ள பாறையில்
எழுதப்பட்டிருக்கிறது. இந்தச் சாசனம் அக்காலத்தில்