பக்கம் எண் :

இசைக்கலை

123


  

இலக்கியங்களை எழுதித் தமிழ் மொழியை வளர்த்ததுபோலவே, இசைக்கலையையும்  சமணர் வளர்த்தார்கள் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

  

இசை

  

         இனி, இசையைப் பற்றிச் சில செய்திகளைக் கூறுவோம். இசை ஏழு. அவை குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன. இவை தமிழ்ப் பெயர்கள். மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம், ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம் என்பன வடமொழிப் பெயர்கள்.

  

         இசை பிறக்கும் இடங்களாவன: மிடற்றினால் குரலும், நாவினால் துத்தமும், அண்ணத்தால் கைக்கிளையும், சிரத்தால் உழையும், நெற்றியால் இளியும், நெஞ்சினால் விளரியும், மூக்கால் தாரமும் பிறக்கும்.

  

         இவை ஏழ்சுரம் எனவும், வீணையில் ஏழ்நரம்பு எனவும் படும். இசை அல்லது இராகத்தின் தகுதி நான்கு வகைப்படும். அவை:

1. இடம். 2. செய்யுள், 3. குணம், 4. காலம் என்பன. இவற்றை விளக்குவோம்.

  

         1. இடம் : இடம் பற்றிய இராகம் ஐந்திணை இராகம். அவை:
குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்னும் ஐந்து வகை
நிலத்திற்குரிய குறிஞ்சி, பாலை, சாதாரி, செவ்வழி, மருதம் என்பவை.
  
         2. செய்யுள் : செய்யுளைப் பற்றிய இராகம். வெண்பாவின் இராகம்
சங்கராபரணம். அகவற்பா அல்லது ஆசிரியப்பாவின் இராகம் தோடி.
கலிப்பாவின் இராகம் பந்துவராளி. கலித்துறையின் இராகம் பைரவி.
தாழிசையின் இராகம் தோடி. விருத்தப்பாவின் இராகம் கலியாணி,

காம்போதி,  மத்தியமாவதி முதலியன.