124 |
தமிழர் வளர்த்த
அழகுக் கலைகள் |
உலாச்செய்யுளின் இராகம் சௌராஷ்டிரம். பிள்ளைத் தமிழின் இராகம்
கேதாரகவுளம். பரணியின்
இராகம் கண்டாரவம்.
3 குணம் : குணம் பற்றிய இராகங்கள். இரக்கம் உள்ளவை: ஆகரி,
கண்டாரவம், நீலாம்பரி,
பியாகடம், புன்னாகவராளி. துக்கம் உள்ளவை:
மேற்கூறிய இரக்க
இராகங்களும் வராளி இராகமும்.
மகிழ்ச்சியுள்ளவை:
காம்போதி, சாவேரி, தன்னியாசி,
யுத்த
இராகம்: நாட்டை.
4. காலம் : காலம் பற்றிய இராகங்கள். வசந்த கால இராகம்:
காம்போதி,
அசாவேரி, தன்னியாசி.
மாலைவேளை இராகம்: கலியாணி, காபி, கன்னடம், காம்போதி.
யாமவேளை இராகம்; ஆகரி.
விடியற்காலை இராகம்: இந்தோளம், இராமகவி, தேசாட்சரி, நாட்டை,
பூபாளம்.
உச்சிவேளை இராகம்: சாரங்கம், தேசாட்சரி.
எக்காலத்துக்கும் பொதுவான இராகங்கள்: ஆகரி, இந்தோளம்,
இராமகவி,
சாரங்கம், பூபாளம்
இவை நீக்கி மற்ற இராகங்கள் எல்லாம்
கொள்க.
இராகங்கள்: பைரவி, தேவகிரியை, மேகவிரஞ்சி, குறிஞ்சி, பூபாளம்,
வேளாவளி, மலகரி,
பௌளி, சீராகம், இந்தோளம், பல்லதி, சாவேரி,
படமஞ்சரி, தேசி,
இலலிதை, தோடி, வசந்தம்,
இராமக்கிரியை, வராளி,
கைசிகம், மாளவி, நாராயணி
குண்டக்கிரியை, கூர்ச்சரி, பங்காளம்,
தன்னியாசி, காம்போதி, கௌளி, நாட்டை,
தேசாட்சரி,
காந்தாரி, சாரங்கம்
முதலியன.
இவற்றுள், பைரவி என்பது ஆண் இராகம். தேவக்கிரியை,
மேகவிரஞ்சி,
குறிஞ்சி இவை பெண் இராகங்கள்.
|